[ad_1]
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியே இந்தாண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதனால், மற்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது உயிரையே மாய்த்துக் கொண்டார்.
இந்தநிலையில், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் படியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) இணையதளத்தில் (cbseneet.nic.in) அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு, மாநில பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், உண்மையில்லை. கடந்த 2017-ம் ஆண்டைப் போலவே இந்தாண்டும் நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியே நீட் தேர்வு! மத்திய அரசு திட்டவட்டம்
TAGS :
COMMENTS