[ad_1]
மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவை தயாரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில், மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. சித்தா, ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள், ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அலோபதி மருத்துவராகப் பணியாற்றலாம் என்பது உட்பட, பல புதிய விதிகளைக்கொண்டுள்ளது இந்த மசோதா. புதிய தேசிய மருத்துவ கவுன்சிலை அமைக்க மசோதா கொண்டுவந்துள்ள மத்திய அரசை எதிர்த்து, இன்று இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின், `தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வரக் கூடாது. மருத்துவக் கல்வியை தனியாருக்கு தாராளமாக தாரை வார்ப்பதற்காகவே மசோதா கொண்டுவரப்படுகிறது. மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறிப்பதா?' என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`மாநில அரசின் உரிமையைப் பறிப்பதா?' - தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிராகக் கொதிக்கும் ஸ்டாலின்
TAGS :
COMMENTS