[ad_1]
இலவச வீடுகட்டி தர வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஸ்டவ், குக்கர், குடம், பாயுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேசினோம். ``தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்து, வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இதில் தூத்துக்குடியில் வசித்து வரும் 18 பேருக்கு மட்டும்தான் அரசால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 வருடமாகத் தொடர்ந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகட்டித்தர வலியுறுத்தி மனு அளித்து வந்தோம். கடந்த ஆண்டு, இந்த 18 திருநங்கைகளுக்கு மட்டும் இலவச வீட்டு மனைப்பட்டாவை அப்போதைய ஆட்சியர் ரவிக்குமார் வழங்கினார். ஆனால், அந்த இடம் தூத்துக்குடி - நெல்லை சாலையில் உள்ள வசவப்பபுரம் அருகிலுள்ள புறம்பு என்ற ஊரில் உள்ள செம்மண் மேட்டுக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. நரிக்குரவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா அளித்துள்ள இடமும் இதன் அருகிலேயே உள்ளது.
இந்த இடத்தில் ஒரு வருடத்துக்குள் வீடு கட்டவில்லை என்றால், அந்த வீட்டுமனைப்பட்டா செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருநங்கைகளுக்காக இலவச வீடுகள் கட்டித்தர தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கிய நிதி எங்கே எனத் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் முறையான பதில் இல்லை. இலவச வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் ஒரு வருட கால அளவு நிறைவடைகிறது. எனவே, எங்களுக்காக ஒதுக்கித்தரப்பட்ட இடத்தில், அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உறுதியான பதிலை ஆட்சியர் அளிக்க வேண்டும். அதுவரை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு உறங்கி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தைக் கைவிட்டு, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`தரையில் மண்ணெண்ணெய் ஸ்டவ்; இடுப்பில் குக்கர்' - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை மிரளவைத்த திருநங்கைகள்
TAGS :
COMMENTS