[ad_1]
ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருச்சியில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கக் கோரி லாரி மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், காவிரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரியும் மணல் அள்ளுவதற்கான தடையை நீக்கக் கோரியும் போராட்டம் நடத்த அனுமதிக் கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுக்கும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அவர்கள், “முசிறி காவிரி ஆற்றில் இருந்து அரசு அனுமதியுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி விற்றுப் பிழைத்து வருகிறோம்.
தற்போது காவிரி ஆற்றில் மணல் எடுக்க அனுமதி இல்லாததால் நாங்கள் வேலையின்றி அவதிப்படுகிறோம். கடன் வாங்கி வண்டி, மாடுகள் வைத்துள்ளோம். தற்போது எங்களால் கடனை கட்ட முடியவில்லை. வறுமையில் குடும்ப நடத்த சிரமப்படுறோம். எனவே முசிறி எல்லைக்குள் நடைபெறும் கட்டுமான பணிகளுக்குக் காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும்படி, நீர்வள ஆதார ஆற்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே மணலுக்கு உரியத் தொகையை கட்டி மணல் அடித்ததுபோல் மீண்டும் அதே முறையைக் கொண்டுவந்தால் நாங்கள் கட்ட தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்கள்.
இதேபோல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் 30-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி மனுக்கொடுத்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடமும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மூலம் மனுக்கொடுக்கப்பட்டது.
மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கக் கோரி அடுத்தடுத்து மனு கொடுக்கப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வேண்டும்’ -திரண்டு வந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள்!
TAGS :
COMMENTS