[ad_1]

இந்து மதத்தை அவமதிப்பது போல இனி யார் பேசினாலும், அவனை கொலை செய்யக்கூடத் தயாராக இருக்க வேண்டும் என நெல்லையில் வைரமுத்துவைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். 
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜவஹர் மைதானத்தில் ஸ்ரீ ஆண்டாள் பக்த சபை சார்பாக வைரமுத்துவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருக்குறுங்குடி மடத்தின் ராமாநுஜர் ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சுவாமி, பக்தானந்தமகாராஜ், அகில இந்திய பக்த பேரவையின் ராமானந்த சுவாமிகள், ஐயா வழி வழிபாட்டு அமைப்பைச் சேர்ந்த சிவச்சந்திரன், ஹரேராமா,ஹரே கிருஷ்ணா அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதி மைக்கேல் டாண்டே, இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும் பா.ஜ-வின் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், ‘இந்து தெய்வங்களை இழிவாகப் பேசினால் அவர்களைக் கொலை செய்யக் கூட தயாராக இருக்க வேண்டும். அப்படிப் பேசக்கூடியவர்களை கொலை செய்ய வேண்டும். இதை சாதாரணமாகப் பேசி விட்டுப் போய்விடக் கூடாது’ என்றவர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களைப் பார்த்து, ‘வைரமுத்துவை கொலை செய்ய வேண்டுமா? கூடாதா?’ எனக் கேட்டார் கூட்டத்தினர், ‘கொலை செய்ய வேண்டும்’ என குரல் எழுப்பினார்கள்.  தொடர்ந்து பேசிய அவர், ’’ஸ்ரீஆண்டாளை தவறாகப் பேசிய வைரமுத்து நாக்கை அறுத்து வாருங்கள், நயினார் நாகேந்திரன் 10 லட்சம் தருகிறேன் என்று சொன்னால் காவல்துறை என் மீது வழக்குப் போடும், ஆனால் இதுவரை வைரமுத்து மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? இது போன்று இந்து மதத்தை இழிவாகப் பேசக் கூடிய வைரமுத்து, வீரமணி போன்றோரை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். 
இந்து தெய்வத்தை இழிவாகப் பேசியதைக் கண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேராவது கூடியிருக்க வேண்டாமா? இவ்வளவு பேருக்குத் தான் உணர்வு இருக்கிறதா? என நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இந்து மதத்தைப் பற்றி இனி யார் பழிக்க வந்தாலும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும். கோயில்களிலும் அவர்களின் வாய் அடங்கும்படியாக யாகம் நடத்தப்பட வேண்டும்’’ என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. நயினார் நாகேந்திரனின் பேச்சு பற்றி பலரும் விமர்சித்து வருகிறார்கள். 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");