[ad_1]
"மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கும் ஊழல் முறைகேட்டுக்கும் வழிவகுக்கும் மக்கள் விரோத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்" என்று மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா திரும்பப் பெறுதல் மற்றும் மருத்துவர்கள் போராட்டம் குறித்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராய நகரின் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள பாலன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, மருத்துவ மாணவர்களுடன் இணைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேசும்போது, "மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் கார்ப்பரேட் மயமாக்கிடவும் மருத்துவ ஆராய்ச்சியில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கிலும், 'போதிய மருத்துவர்களை உருவாக்க வேண்டும்' என்ற பெயரில், மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும், வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்களையும் வெளிநாட்டு மருத்துவர்களையும் நேரடியாக அனுமதிக்க வேண்டும் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அதற்குத் தடையாக உள்ள இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது.
அதாவது, இந்த ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். இவர்களில் 5 உறுப்பினர்களைத் தவிர அனைவரும் நியமன உறுப்பினர்களாகவே இருப்பார்கள். தலைவர், செயலாளர் உட்பட அனைவரையும் மத்திய அரசே நியமிக்கும். இந்த 25 உறுப்பினர்களில் பெரும்பாலோர் மருத்துவர் அல்லாதவர்களாக இருக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைவர் உட்பட யாரை வேண்டுமென்றாலும் மத்திய அரசு பதவி நீக்கலாம். எனவே, இது அதிகாரக் குவிப்புக்கும் ஏதேச்சதிகாரப் போக்குக்கும், ஊழல் முறைகேட்டுக்கும் வழிவகுக்கும். இந்த மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அன்று தாக்கல் செய்துள்ளது.
மாநிலங்களின் உரிமைகளுக்கும் மதச்சார்பின்மைக்கும், நவீன அறிவியல் மருத்துவத்திற்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரான, இந்த மக்கள் விரோத மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனச் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டுமென சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதாவை திரும்ப பெறு! - சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
TAGS :
COMMENTS