[ad_1]



பெங்களூரு நகரில் ஒரு பெரிய காமெடி நடந்திருக்கிறது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க்குகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கான கெடு மார்ச் 31 ம் தேதிதான் என்றாலும் இப்போதே சில நிறுவனங்கள் சில வாடிக்கையாளர்களின் எண்களை முடக்குவதாக பெங்களூரில் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி முடக்கப்பட்ட எண்களில் ஒன்று பிரபாகர் என்பவருடையது. காமெடி என்னவென்றால், கர்நாடகா மாநிலத்தில் ஆதாரை அமலுக்கு கொண்டு வரும் டீமின் முக்கியமான நபர். பெங்களூர் மிரர் இணையதளம் இதைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.


சென்ற வாரம் பிரபாகருடைய மொபைல் எண் வேலை செய்யவில்லை. உடனே, வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தார் பிரபாகர். அப்போது அவரிடம் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்காததால் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் உடனே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஜனவரி முதல் வாரமே OTP மூலம் ஆதார் எண்ணை பிரபாகர் இணைத்திருந்தார். அதைச் சொன்னதும், “அது போதாது சார். உங்கள் கைரேகை தேவை” எனச் சொல்லியிருக்கிறார் அந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரி. ஆதாரையும் சட்டத்தையும் பொதுமக்களைவிட அதிகம் அறிந்த அரசு அதிகாரி இல்லையா பிரபாகர்? அதனால், தான் அப்படி கொடுக்கத் தேவையில்லை என அவரிடம் வாதிட்டிருக்கிறார்.

கடந்த டிசம்பர் 2 முதலே மொபைல் OTP எண் மூலம் ஆதாரை இணைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதன் வேலிடிட்டி சில நிமிடங்கள் மட்டுமே. அதற்குள்ளாக நெட்வொர்க்கை அழைத்துச் சொன்னால், நேரில் போகாமலே நம் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். இதைத்தான் செய்திருக்கிறார் பிரபாகர். ஆனாலும் அவர் எண்ணை முடக்கியிருக்கிறது அந்த டெலிகாம் நிறுவனம். மார்ச் 31 கெடு முடிவதற்குள்ளாகவே இணைப்பைத் துண்டித்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? தங்கள் விருப்பப்படி வாடிக்கையாளர்களை அலைகழிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் ஆதாரை அமல்படுத்தும் அதிகாரி என்பதால் பிரச்னை பெரிதாகியிருக்கிறது. எனில், மற்றவர்கள் கதி? 

ஆதார் வாங்கிய பின்பு என்ன செய்ய வேண்டும்?

* ஆதார் இணையதளத்துக்குச் சென்று, இ-ஆதாரை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஆன்லைன் தளங்களில் ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.

* மத்திய அரசின் பீம் ஆப், UPI ஆப், ஆதார் பே உள்ளிட்ட வசதிகளில் ஆதார் எண் மூலமாகப் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

* அரசின் அதிகாரபூர்வமான ஆதார் ஆப் mAadhaar. இதை மொபைலில் டவுன்லோடு செய்து, ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் போதும்... இதையே ஆதார் கார்டாகப் பயன்படுத்த முடியும். 

* பான் எண், வங்கி எண் போலவே ஆதார் எண்ணும் மிக முக்கியமானது. எனவே, உங்கள் ஆதார் எண்ணை பொது வெளியில் பகிர வேண்டாம்.

* ஆதார் கார்டு பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஆதார் பதிவு மையங்கள், சிறப்பு முகாம்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்தச் சேவை முழுவதும் இலவசம். உங்கள் பகுதியில் இருக்கும் ஆதார் பதிவு மையங்கள் பற்றித் தெரிந்துகொள்ள https://appointments.uidai.gov.in என்ற முகவரியில் தேடலாம்.

எந்தச் சேவைகளுக்கெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?




.......
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");