[ad_1]





சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவடைந்து இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து மீண்டும் களத்தில் இறங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனிதான், இந்தாண்டும் அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கம்-பேக் குறித்தும், அணியில் விளையாட உள்ள வீரர்கள் பற்றியும் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விரிவாகப் பேசியுள்ளார் தோனி.




செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தோனி, `இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், நமது ஆதரவாளர்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றனர். அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமும்கூட. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 18- 20 வீரர்களை இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் இங்குதான் பதிவு செய்தேன். அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் சி.எஸ்.கே-வில் எப்போதுமே இருக்கும். இதுவே சென்னை அணியின் சிறப்பு. ஏற்றம் இறக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இருப்பினும் கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம். சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது' என்றார் உற்சாகத்துடன்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");