[ad_1]
நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கமல்.
இந்நிலையில்தான் இன்று போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து காரில் வெளியே வந்த ரஜினியிடம் நிருபர்கள், `கமலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளாரே, அவருடன் கூட்டணி வைப்பீர்களா' என்று கேட்டனர். அதற்கு ரஜினி, `கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து கமல்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றி காலம்தான் பதில் சொல்லும். தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ள கமலுக்கு எனது வாழ்த்துகள்' என்று சூசகமாகப் பதில் கூறியவரிடம், `ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் நீங்கள் தயாராக இருப்பீர்களா' என்று கேட்கப்பட்டது, `கண்டிப்பாகத் தேர்தலைச் சந்திப்பேன்' என்று கூறிவிட்டுப் பறந்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச்
TAGS :
COMMENTS