[ad_1]
யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இந்தநிலையில் இதுகுறித்த வைரமுத்துவின் ட்விட்டர் பதிவில், 'தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல..! வைரமுத்து விளக்கம்
TAGS :
COMMENTS