[ad_1]





சொகுசு காரை பதிவுசெய்வதில் வரி ஏய்ப்புசெய்த வழக்கில், சரண் அடைந்த எம்.பி-யும், நடிகருமான சுரேஷ் கோபி கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 




 


மலையாள நடிகர், நடிகைகள், பிரபலங்களைப் பெரும் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது, சொகுசு கார் பதிவுசெய்வதில் வரிஏய்ப்பு செய்த விவகாரம். சொகுசுக் கார்களை கேரளாவில் பதிவுசெய்ய அதிக வரி கொடுக்க வேண்டும். ஆனால், அவற்றை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதிவுசெய்தால், குறைந்த வரித்தொகை தந்தால் போதும். பல பிரபலங்கள் வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் தங்கள் கார்களைப் பதிவுசெய்து ஓட்டிவந்துள்ளனர். இதில், மலையாள நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில், அமலா பால் ஆகியோர் சிக்கினார்கள்.இவர்கள்மீது கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பகத் பாசில் ரூ.17.68 லட்சம் வரித்தொகை கட்டினார். திருவனந்தபுரம் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் இந்த வழக்கை விசாரித்துவருகிறது. இந்நிலையில், இன்று அமலா பால் குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரணடைந்தார். அவர், ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றதால் கைதுசெய்யப்படவில்லை. அதேசமயத்தில், இன்று சரணடைந்த நடிகர் சுரேஷ் கோபி, கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரூ.1 லட்சம் பிணைத்தொகை, மற்றும் இருநபர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இது, இன்று மலையாளப் பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
சுரேஷ் கோபி, அஜீத் நடித்த 'தீனா', விக்ரமின் 'ஐ' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");