[ad_1]

''ஆளும் கட்சி சொல்வதைத்தான் கேட்பார்கள். அமைச்சர் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். எனக்கு நன்றி சொல்லாதவர், நல்ல மனிதராக இருந்தால், நான் கொண்டுவந்த தண்ணியைக் குடிக்காதே'' என அமைச்சர் மணிகண்டனின் ஆணவப் பேச்சால் அதிர்ந்து கிடக்கிறது ராமநாதபுரம்.





ராமநாதபுரத்தின் குடிநீர் தேவைக்காக, வைகையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள  ஊரணிகள் மற்றும் வாறுகால்களை மீட்டு, அவற்றின் வழியாகத் தண்ணீர் ஊரணிகளில் தேக்கப்பட்டதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரத்துக்குத் தண்ணீர் கொண்டுவர முயற்சியெடுத்த அமைச்சர் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர். இதனிடையே, ம.தி.மு.க மற்றும் பி.ஜே.பி சார்பில், ஊரணிகளை மீட்டு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் மணிகண்டன், மாவட்ட அதிகாரிகளுக்கு டோஸ் விட்டதுடன், அந்த போஸ்டர்களை அகற்றவும், போஸ்டர்களை ஒட்டியவர்கள்மீது வழக்குப் பதியவும் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.இந்நிலையில், உச்சிப்புளியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய  அமைச்சர் மணிகண்டன், ''காவிரியிலி ருந்து தண்ணீர் கொண்டுவந்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்து போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்குதான் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆளும் கட்சிக்குத்தான் அதிகாரிகள் கட்டுப்படுவார்கள். ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ, ஆளும் கட்சி அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். எவனோ கண்டவன் நின்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்கள். இது தெரியாமல் சில கேவலமான ஜென்மங்கள், பிரபாகரன், வைகோ படங்களைப் போட்டு அதிகாரிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள். சில முட்டாள்கள், அதிகாரிகளுக்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறி போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இந்தத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எனக்கு ஏன் நன்றி கூறிப் போட மனம் வரவில்லை?நீ நல்ல மனிதனாக இருந்தால், நான் கொண்டுவந்த தண்ணியை குடிக்காதடா. அதிகாரிகளுக்கு நன்றி சொல்வது மிகப்பெரிய தவறான விசயம். அதைக்கூட தெரியாமல், வால் போஸ்டர்  ஒட்டியிருக்கான். குறிப்பிட்ட  அந்த அதிகாரிகள், அவர்களையெல்லாம் கூப்பிட்டு உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டார். சில முட்டாள்கள், போஸ்டர் அடித்து கைதுசெய்யப்படும் நிலையில் இருக்கிறார்கள். ஆளும் கட்சி அமைச்சர்தான் இந்தத் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும். என்னை வாழ்த்தி தி.மு.க நிர்வாகிகள் சுப.தங்கவேலன், கிருபானந்தம் போன்றவர்கள் எல்லாம் எனக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், என்னை வாழ்த்த மனம் இல்லாத சிலர், அதிகாரிகளை வாழ்த்தியிருக்கிறார்கள்'' என்றார்.அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கவேண்டிய அமைச்சர் ஒருவரே பொதுக்கூட்ட மேடையில் அதிகாரிகள் தாங்கள் சொல்வதைதான் செய்வார்கள் என்றும், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தவர்களை மூன்றாம் தர பேச்சாளர்கள் போல தரக்குறைவாக பேசியிருப்பதும் மாவட்டத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");