[ad_1]





Chennai: அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.






இது சம்பந்தமாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில், சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து 3-ம் தேதி (நாளை) முதல் 94 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்களில் உள்ள 1,640 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி, அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளைச் சார்ந்த நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 29 ஆயிரத்து 387 ஏக்கர் பழைய பாசனப் பகுதிகளுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் புதிய பாசனப் பகுதிகளுக்கும் 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தகுந்த இடைவெளி விட்டு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");