[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசியது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்வதில்லை என்றும் கூறுகின்றன. ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவரும்நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்றிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். இந்த வெற்றி, ஆளும்கட்சியைவிட தி.மு.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் தோல்வியால் பொங்கியெழுந்த மு.க.அழகிரி, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்தார். ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தி.மு.க இருக்கிறது என்றால், ஸ்டாலின் என்னதான் செயல்படுகிறார்? வெறுமனே வேனில் ஏறி நின்றபடி வாக்கு கேட்டால் வெற்றி கிடைக்காது. செயல் தலைவராக ஸ்டாலின் பதவி வகிக்கும் வரை எதுவும் சரியாக நடக்காது. தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது. வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால், தி.மு.க-வில் மாற்றம் தேவை" என்று கூறியிருந்தார்.
மு.க.ஸ்டாலினின் தலைமையைக் கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று சென்னை வந்தார். கோபாலபுரம் சென்ற அவர், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, `தி.மு.க தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்' என்று கூறினார்.
ரஜினிகாந்த்தை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அவரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று பதில் அளித்தார்.
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி குரல் கொடுத்துவந்த நிலையில் கருணாநிதியை சந்தித்திருப்பது, தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி!
TAGS :
COMMENTS