[ad_1]
‘விடுமுறை நாள் என்பதால் சிறிய ட்ரிப் போவோம்' என முடிவெடுத்து, நான்கு மாணவிகள் ஒரு காரில் பயணம் செய்தனர். முன்பக்கம் சென்ற லாரி தடுமாறியதில், மாணவிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்துவிட்டது. காரை ஓட்டிய மாணவி சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயம் எதுவும் ஏற்படவில்லை. காரில் இருந்த மற்ற மூவரும் வெளியே தூக்கியெறியப்பட்டு உயிரிழந்தனர். அந்த நால்வரில் தமிழக ஆர்.டி.ஓ அதிகாரியின் மகளும் ஒருவர்.
இந்தச் சம்பவத்தை கடந்த வாரம் கார்களின் பாதுகாப்பைக் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் அஷோக் பில்லர் ஆர்.டி.ஓ பாஸ்கரன் நினைவூட்டினார். தற்போது இதைப் பதிவிடுவதற்குக் காரணம், மாருதியின் #Pehnikya எனும் பிரசாரம். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாருதி சுசூகியால் இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, `69 சதவிகித இந்தியர்கள், சீட் பெல்ட்டைப் பயன்படுத்துவதில்லை!' எனக் கூறுகிறது. பின் சீட்டில் இதைப் பயன்படுத்துபவர்கள் அதிகபட்சம் நான்கு சதவிகிதம்தான் எனவும், சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாதவர்களில் 80 சதவிகிதம் திருமணமாகாதவர்கள் எனவும் தெரிவிக்கிறது. `ஒரு கால்கட்டு போட்டால்தான் பொறுப்பு வரும் என்பது சீட் பெல்ட் விஷயத்தில் உண்மைபோல'. கார் ஓட்டுபவர்களில் ஆண்களில் 97 சதவிகிதமும், பெண்களில் 92 சதவிகிதமும் சீட் பெல்ட் அணியாதவர்கள். அதிலும் பின்பக்க சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாதவர்களில் 80 சதவிகிதம் தென் இந்தியர்கள்தாம். ஏன் மக்கள் சீட் பெல்ட்டைப் பயன்படுத்த இவ்வளவு தயங்குகிறார்கள் எனக் கேட்டதற்கு, அவர்கள் சில காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ் பிடித்தால், `முன் பக்கம் உள்ளவர்கள் ஏன் சீட் பெல்ட்டைப் போடவில்லை?' எனக் கேட்கிறார்களே தவிர, பின் சீட்டில் உள்ளவர்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த மெத்தனமே 45 சதவிகித மக்கள் பின்பக்க சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம். `சீட் பெல்ட் போடாம கார் ஓட்டினாத்தான் கெத்து' என்கிறார்கள் 40 சதவிகித இந்திய மக்கள். கார்களில் சீட் பெல்ட் கட்டாயம் என்று இந்திய மோட்டார் வாகனச் சட்டம் சொல்லும்போதும் `இது எப்படி நம் உயிரைக் காப்பாத்தும்' என 34 சதவிகித மக்கள் சந்தேகிக்கின்றனர்.
`காலையில் அழகாக இஸ்திரிபோட்டு பர்ஃபெக்டாக வேலைக்குக் கிளம்புகிறோம். சீட் பெல்ட் போட்டால் சட்டை கலைந்துவிடாதா?' என்று உடைமேல் கண்ணும்கருத்துமாக இருப்பதால், 32 சதவிகித இந்தியர்கள் ‛சீட் பெல்ட்டுக்கு நோ’ சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் திருமணமும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை உணராதவர்களில் 80 சதவிகிதத்தினர் திருமணமாகாதவர்கள். 66 சதவிகிதத்தினர் திருமணமானவர்கள். 55 சதவிகிதத்தினர் திருமணமாகி குழந்தைகள் உடையவர்கள்.
Center for Auto Safety எனும் அமெரிக்க நுகர்வோர் அமைப்பு, அமெரிக்காவில் மட்டும் ரியர் சீட் பெல்ட்டைப் பயன்படுத்தாததால் வருடத்துக்கு 1,000 உயிரிழப்புகள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். ``சீட் பெல்ட்டைப் பயன்படுத்தினால் 44 சதவிகிதம் இந்த உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தலாம்'' என்கிறார்கள். 2016-ம் ஆண்டு விபத்துகளால் உயிரிழந்தவர்களில் 5,638 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள். லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் ``வேன் மற்றும் எஸ்.யூ.வி-களில் சீட் பெல்ட் பயன்படுத்துவதால், விபத்தின்போது 73 சதவிகித அளவுக்கு ஆபத்தான காயங்களைத் தவிர்க்கலாம்'' என்கிறார்கள். இந்தியாவில் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்காவின் ஆராய்ச்சி ஒன்று `பின்பக்க சீட் பெல்ட் அணியாத பயணிகள் ஸ்டீயரிங்கை நோக்கி 56 கிலோமீட்டர் வேகத்தில் தள்ளப்படுகிறார்கள்' எனச் சொல்கிறது. காரை வேகமாக ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கார் அந்த இடத்திலேயே நின்றுவிடும். அதனுள் அமர்ந்திருக்கும் நாம் காரைவிட அதிவேகமாக வெளியே தூக்கி எறியப்பட்டு காயப்படுவோம். சில சமயங்களில் உயிரிழப்புகளும் நேரக்கூடும்.
ஏ.பி.எஸ், ஏர் பேக், ஈ.பி.டி எனப் பாதுகாப்பான நவீன கார்களில் பயணம் செய்தாலும் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் உயிரிழப்புதான். இதை அணிவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. இதை எமனுக்கு ஆஃப் ஸ்விட்ச் என நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறை காரில் ஏறும்போது சீட் பெல்ட்டை மறக்காதீர்கள்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சீட் பெல்ட் அணியாதவர்களின் தூக்கி எறியப்படும் வேகம் தெரியுமா.!? அதிர்ச்சி சர்வே
TAGS :
COMMENTS