[ad_1]
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்- புரவ் ராஜா இணை, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மூத்த வீரர் லியாண்டர் பயஸ், சக வீரர் புரவ் ராஜாவுடன் இணைந்து களமிறங்கியிருக்கிறார். இன்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி முரே, பிரேசிலைச் சேர்ந்த புருனோ ஸோரஸ் இணையை எதிர்கொண்டது. முதல் செட்டை பயஸ் இணை 7-6 (3) என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்த செட்டை முரே-புருனே இணை 7-5 என்ற கணக்கில் தனதாக்கியது. இதையடுத்து, வெற்றியை நிர்ணயிக்கும் இறுதிச்சுற்றில், இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், பயஸ் இணை அந்த செட்டை 7-6 (6) என்ற கணக்கில் டைபிரேக்கரில் கைப்பற்றியது. அத்துடன் 7-6 (3), 5-7, 7-6 (6) என்ற கணக்கில் பயஸ் இணைக்கு வெற்றி வசமானது. இந்த வெற்றியின்மூலம் பயஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. பயஸ் இணை, அடுத்த சுற்றில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜூவான் செபாஸ்டியன் கேபல், ராபர்ட் ஃபரா இணையை எதிர்கொள்ளும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆஸ்திரேலிய ஓப்பன்... பயஸ் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்!
TAGS :
COMMENTS