[ad_1]
குஜராத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இருந்த தீவிரவாதி அப்துல் சுபான் குரோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
2008- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அகமதாபாத், சூரத் நகரங்களில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையங்கள், சந்தை, மருத்துவமனைகளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. பெரும்பாலானவை டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள். அப்படி, 21 குண்டுகள் வெடித்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பின்னணியில் இருந்தது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரோஷி என்ற தாகீர். தேசிய பாதுகாப்பு முகமை இவரை மிகவும் தேடப்படும் நபராக அறிவித்திருந்தது.
பலமுறை போலீஸின் பிடியில் இருந்து தப்பித்த அப்துல் கபான் குரோஷி, நேற்று டெல்லி காசிப்பூர் பகுதியில் பிடிபட்டார். துப்பாக்கி முனையில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்தியாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, நேபாளத்தில் பல ஆண்டு காலம் பதுங்கி வாழ்ந்த தாகீர், 2013 முதல் 2015ம் ஆண்டு வரை சவுதி அரேபியாவில் தலைமறைவாகி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சாப்ட்வேர் இன்ஜினீயராக இருந்து தீவிரவாதியாக மாறிய தாகீருக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நிபுணத்தவம் இருந்தது.
2006-ம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடி குண்டுவெடிப்பு, 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. வங்கதேசத்திலும் குண்டுவைக்க முயன்றதாக புகார் உள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தாகீர், மும்பையில் படித்து கொண்டிருந்தபோது, தடை செய்யப்பட்ட மாணவ இயக்கமான சிமியில் இணைந்தார். பின்னர், இந்தியன் முஜாகீதின் அமைப்பில் சேர்ந்து, பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்தியாவின் பின்லேடன் என்றும் இவரை கூறுவார்கள். இன்டர்போல் அமைப்பும் சிவப்பு நோட்டீஸ் அறிவித்து இவரைத் தேடி வந்தது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பல குண்டுவெடிப்புகளுக்கு காரணமான இந்தியாவின் 'பின்லேடன்' கைது
TAGS :
COMMENTS