[ad_1]
' 'ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய்க்கிணறுகள் ஒன்பது மாதங்களில் மூடப்படும்' என்று எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அந்த ஒன்பது மாத அவகாசமும் முடிந்துவிட்டது. இதற்காக மூன்றாம் கட்ட போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவேண்டியிருக்கும்' என்ற குரல்கள் நெடுவாசல் பகுதியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இதுகுறித்து, போராட்டத்தை முன்னெடுத்து இயங்குபவர்களில் ஒருவரான பசுமை ராமநாதனிடம் பேசினோம். ``தற்போது, நெடுவாசல் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறோம். முதல் கட்டமாக 22 நாள் மிகத் தீவிரமாக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மாவட்ட ஆட்சியர் கணேஷும் நேரில் வந்து எங்களுக்கு உறுதியான உத்தரவாதம் தந்தார்கள். அவர்கள் சொன்னது என்னவென்றால், 'ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான எந்த நிறுவனமும் இங்கே வராது. அதற்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம். எங்களை மீறி அவர்கள் வந்துவிடவும் முடியாது. ஒன்பது மாத அவகாசத்தில் அனைத்து ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய்க் கிணறுகளும் அப்புறப்படுத்தப்படும்' என்றார்கள். அத்துடன், போராட்டக் களத்தின் எதிரேதான் மேல்நிலைப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளிப் பிள்ளைகளுக்குப் பொதுத் தேர்வு வந்தது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதினோம். இந்த இரண்டு காரணங்களைவைத்து எங்கள் முதல் கட்டப் போராட்டத்தை அப்போது முடித்துக் கொண்டோம். அதன்பிறகு, மீண்டும் தன்னெழுச்சியாக இரண்டாம் கட்டப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தபோது, நாங்கள் சுய கட்டுப்பாடாக மக்களுக்கு வலியுறுத்திய விஷயம், அரசுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத, அறவழியில் இந்தப் போராட்டம் இருக்க வேண்டும் என்பதுதான். அறவழியில் எங்களது இரண்டாம் கட்டப் போராட்டம் 225 நாள்களுக்கும் மேலாக நடந்தது. அந்த நாள்களில், அரசு எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், எங்கள் போராட்டத்தை ஒடுக்கும் எந்த நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தச் சூழலில்தான், 'ஜெம்' நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நிலைமை சீரடைவதை நாங்கள் உணர்ந்தோம்.
நெடுவாசல் நீங்கலாக, மற்ற நான்கு 'ஹைட்ரோ கார்பன் பாயின்ட்'டுகளான நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வானக்கன்காடு, கல்லிக்கொல்லை பகுதிகளில் மாதாமாதம் ரிப்போர்ட் எடுக்க ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் வருவது வழக்கம். அவர்களும் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இந்த தொடர்ச்சியான நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து, மேல்மட்டக் குழு ஒன்று அமைத்து சில முடிவுகளை எடுத்தோம். அந்த உயர்மட்டக் குழுவில், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, புதுக்கோட்டை ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் இருக்கிறார்கள். அந்த உயர்மட்டக் குழு கூடி எடுத்த முடிவின்படி, நெடுவாசல் மக்கள் போராட்டத்தை மீண்டும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு எழுதிக்கொடுத்த ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், ஆழ்குழாய்க் கிணறுகள் இன்னும் மூடப்படவில்லை. இனியாவது அந்தக் காரியத்தை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கையில் எடுக்குமானால், நாங்களும் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியிருக்கும். அரசு பதுங்கிப் பாயத் தயாராக இருக்குமானால், நாங்களும் அதே வழிமுறையில் ஈடுபடவேண்டியிருக்கும்" என்றார், உறுதி தெறிக்கும் குரலில்.
மீண்டும் நெடுவாசலில் போராட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், அலர்ட் ஆகியுள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
போராட்டத்துக்கு மீண்டும் தயாராகும் நெடுவாசல்! - அலர்ட் ஆகும் அரசு
TAGS :
COMMENTS