[ad_1]





நீதித்துறை செயல்பாடுகுறித்து குற்றம் சாட்டிய 4 நீதிபதிகளையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்துப் பேசியுள்ளார். 


 


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமகேஸ்வரர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசஃப், மதன் லோக்கூர் ஆகிய 4 பேர்  சில தினங்களுக்கு முன்பு, 'உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை' என்று ஊடகங்கள் முன்பாக பரபரப்புக் குற்றம் சாட்டினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள், ஊடகத்தினரைச் சந்தித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்மீது அதிருப்தி தெரிவித்த  4 நீதிபதிகளையும் தன்னுடைய அறைக்கு அழைத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");