[ad_1]
` 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ரஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்.' ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். பல சர்ச்சைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸாக வேண்டிய படம், இன்னும் வெளிவராமல் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.
`பத்மாவத்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. மேலும், `பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்த மாநில அரசுகள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது. அந்தப் படம் வெளியாகும்போது, மாநிலங்கள் பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டும்' என்று கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச அரசுகள், முன்னர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடைகோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
TAGS :
COMMENTS