[ad_1]





இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கூறியுள்ளார். 




தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில், இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை விராட்கோலி தலைமையிலான தற்போதைய அணி போக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடர்குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் என்பது முக்கியமானது. முதல்நாளில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே, அடுத்தடுத்த நாள்களில் வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் விளையாட முடியும். முதல் நாளில், முதல் ஸ்பெல் மிகவும் முக்கியமானது. இந்திய அணியின் வெற்றி அல்லது தோல்வி என்பது, தென்னாப்பிரிக்க மைதானங்களில் புதிய பந்தை பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. புதிய பந்தை நமது பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கையாண்டுவிட்டால், அது வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துவிடும். பெரிய அளவில் ரன் குவிப்பது பலமாக அமையும்’ என்றார்.


கடந்த 1992-ம் ஆண்டு, முகமது அசாருதீன் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நினைவுகளையும் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துகொண்டுள்ளார். அதுகுறித்துப் பேசியுள்ள சச்சின், ‘தென்னாப்பிரிக்காவில் விளையாடியது மறக்க முடியாத அனுபவம். அங்கு சென்ற முதல் சில நாள்களிலேயே, எதிரணிக்கு எந்தளவுக்கு அவர்களால் சவால் அளிக்க முடியும் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். குறிப்பாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடனான பயிற்சிப் போட்டியைப் பற்றி குறிப்பிட வேண்டும். அந்நாட்டில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அணிகள்கூட எந்தளவுக்கு சவால் கொடுக்கின்றன என்பது கண்டு வியந்தோம். ஒவ்வொரு கட்டத்திலும் தரமான கிரிக்கெட் விளையாட்டைக் கொடுக்க வேண்டும் என்பதில் தென்னாப்பிரிக்கா எப்போதும் முன்னணியில் இருக்கிறது’ என்றார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");