[ad_1]
ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் உயிரிழப்பது, வழக்கமான ஒன்றுதான் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார், பா.ஜ.க எம்.பி நேபால் சிங்.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா பகுதியில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம்மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில், இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதுகுறித்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த நேபால் சிங், “பொதுவாக ஒரு சின்ன கிராமத்தில் சண்டை நடந்தாலே பலர் காயமடைகிறார்கள். அப்படியிருக்கும்போது, எல்லையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது சகஜம்தான்.
எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் சொல்லுங்கள். அனுதினமும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அதை மாற்ற முடியாது. குண்டுகளைச் செயலிழக்கச்செய்யும் முறை ஏதேனும் இருக்கிறதா என்ன. அப்படியிருந்தால் சொல்லுங்கள், அந்த முறையை நடைமுறைப்படுத்தி ராணுவ வீரர்களைக் காப்பாற்றலாம். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துடன் மத்திய அரசு துணைநிற்கும்” என்று உளறிக்கொட்டி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`ராணுவத்தில் இருப்பவர்கள் உயிரிழப்பது சகஜம்!’ - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்.பி
TAGS :
COMMENTS