[ad_1]





Coimbatore: கோவை, சாரமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் , ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை, கரும்புக்கடை அருகே சாரமேடு அனுப்பர்பாளையத்தில் மாநகராட்சியின் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1-ம் வகுப்பில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை 98 மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள். ஆனால், அங்கு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை மட்டுமே இருப்பதால், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தலைமையாசிரியர் மாநகராட்சி அளவில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்ளச்  சென்று விட்டால், அந்த ஒரு ஆசிரியர்தான் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் கூறுகையில், "ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களின் கற்கும் திறன் குறைகிறது. பள்ளிக்கு தனியாக சமையலறை இல்லாததால், படிக்கட்டுகளில் வைத்து சமைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒரே ஆசிரியர் இரு மொழிகளில் பாடம் நடத்துவது மிகவும் சிரமமான விஷயம். தமிழக அரசு சிலை வைப்பதற்கும், விழா கொண்டாடும் பணத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சாலையையொட்டி இருக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிதர முன் வரவேண்டும். தற்போது உள்ள ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் பாடம் நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களது பணிச்சுமையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");