[ad_1]
...வாக்குமூலம் என்ற பெயரில் முண்டேல்பாஜூ சொன்னது எங்களை சூடாக்கி விட்டது. 'சார் நான் தனி ஆள். எந்தக் கூட்டாளியும் எனக்கு இல்லை. பெரிய மருந்து வியாபாரிக்கு நான் ஒரேமகன். நீங்கள் தேடிவந்த ஆளும் நான் இல்லை. என் கையை மடக்கி ஏன் கட்டிப் போட்டீர்கள், என்னை ஏன் இத்தனை பேர் சேர்ந்து பிடித்தீர்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. விஜயவாடா டவுனில் இந்த விஷயம் தெரிந்தால், உங்களுக்குத்தான் சிக்கலாகி விடும். பரவாயில்லை, போகட்டும்... உங்களுக்கு அந்த 'மில்'லில் இருக்கும் ஆட்கள் யார் என்றுதானே தெரியவேண்டும் ? அவர்கள், மூலிகைகளையும், மலைத்தேனையும் எடுக்க ரெகுலராக இங்கு வருகிறவர்கள். பாரஸ்ட் பர்மிஷன் உள்ளவர்கள். மூலிகைகள், காட்டில் எங்கிருக்கிறது என்று அவர்களுக்குத்தான் தெரியும். பத்துநாளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒவ்வொரு குழுவாக இப்படி வந்து தங்குவார்கள். அந்த 'மில்' லே எங்களுடையதுதான். காட்டுக்குள் வந்து போகிறவர்கள் தங்கிக் கொள்ளத்தான் அப்படியே விட்டு வைத்திருக்கிறோம்.
எங்களின் மருந்துக் கம்பெனிக்குத் தேவையான மூலிகைகளை வாங்கிப்போக வாரத்தில் இரண்டுநாள்கள் நான் இங்கு வருவேன். அப்படி வரும் போதெல்லாம், அவர்கள் சாப்பிட பிரியாணி, இனிப்பு, கார வகைகள் என்று பெரிய பார்சலையே கட்டிக் கொண்டு வருவேன். மது பாட்டில்களும் கொண்டு வந்து தருவேன். அவர்கள் எனக்குத் தரும் மூலிகைகளுக்குப் பணமே கேட்க மாட்டார்கள்... நானாகப் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். இதை அவர்களிடமே நீங்கள் விசாரித்துப் பாருங்கள்.' என்றான் சாதாரணமாக...
முண்டேல்பாஜூ சொன்னதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், 'சரிடா, அதை விடு. நீ மருந்து வியாபாரியாகவே இருந்து விட்டுப் போ. உன் கூட்டாளிகள் இந்த 'மில்' லில் இல்லையென்றால் வேறு எங்கே இருக்கிறார்கள். கொள்ளையடித்த நகைகளை எங்கே வைத்திருக்கிறாய்? இங்கேயே சொல்கிறாயா அல்லது உன்னை வேறு இடத்துக்குக் கொண்டு போனால் தான் சொல்வாயா? எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது... ம்ம்ம் சீக்கிரம், சீக்கிரம்' என்று அவன் பதிலை சாதாரணமாக அடுத்த கேள்விக்குள் போனார்.இன்ஸ்பெக்டரின் இந்த அணுகுமுறை முண்டேல்பாஜூக்கு புதிய அனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று அவனுக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போலீஸ் அவனைக் கொஞ்சங்கூட நம்பவில்லை என்பதை, உணர்வுகளையே வெளிப்படுத்தாத அவன் கண்கள் அந்த நிமிடம் வெளிப்படுத்தியது. அதை எங்கள் கண்கள் உள்வாங்கிக் கொண்டது, அடுத்த நொடியே எங்கள் விழிமொழியை இன்ஸ்பெக்டர் முழுமையாகப் படித்து விட்டார். அதை நாங்களும் கவனித்தோம். இன்ஸ்பெக்டர் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே, 'ம்ம்ம் ஆகட்டும்' என்ற உத்தரவு இன்ஸ்பெக்டர் கண்களில் டைப் அடித்தது. அவ்வளவுதான் இது, யார் கைவரிசை என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு முண்டேல் பாஜூ மீது எங்கள் கைகளும், கால்களும் நடவு செய்யத் தொடங்கி விட்டது.
அதிகபட்சம் இரண்டு நிமிடம் கூட அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 'சார்... சார்... சார்...' என்ற கதறலுடன் பேச ஆரம்பித்து விட்டான். 'இன்று இரவுக்குள் நாம் மாரேடிபூடி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனால் என் கூட்டாளி தோட்டா கிருஷ்ணமூர்த்தியைப் பிடித்து விடலாம். நீங்கள் தூரமாக நில்லுங்கள். நான் தப்பித்து ஓடமாட்டேன், உங்களிடம் துப்பாக்கி இருப்பது எனக்குத் தெரியும். டவுன் போலீஸ் ஸ்டேசன், பிளாக் 1 ஆம் நம்பர் 'கேட்' டுக்குப் பக்கத்தில்தான் கிருஷ்ணமூர்த்தி எனக்காகக் காத்திருப்பான். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாங்கள் இந்த இடத்தில் தவறாமல் சந்திப்போம்.
இன்றுதான் வியாழக் கிழமை. இன்றுமட்டும் நான் அவனைத் தேடிப் போகாமல் விட்டு விட்டால், எனக்கு ஆபத்து என்று தெரிந்து அவன் தப்பித்துப் போய் விடுவான். இன்று மட்டும் அவனைப் பிடிக்காமல் போனால் பிறகு எப்போதுமே பிடிக்க முடியாது. எங்கிருப்பான் என்று கண்டுபிடிப்பதும் லேசான காரியம் அல்ல. அவனுக்கு வீடு, குடும்பம் என்று எதுவும் கிடையாது. ஏதாவது ஒரு கூட்ஸ் ரயிலில் ஏறி, ரயில் கடைசியாக எங்கு போய் நிற்கிறதோ அங்கு இறங்கிக் கொள்வான். அப்படியே அந்த ஸ்டேட்டில் கொஞ்சநாள் வாழ்வான்...' என்றவன் கொஞ்சம் நிறுத்தி,' சார், சார்... இங்கிருந்து சீக்கிரமாகக் கிளம்புங்கள் சார். அவன் தப்பித்து விட்டால், அதன்பிறகு நான் சிங்கிளாக உங்களிடம் உதைபட்டு சாகமுடியாது... வாங்க சார் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடலாம். அவனைப் பிடித்தால்தான் நகைகள் இருக்கும் இடம் தெரியும்' என்று கதறினான்.அவன் கதறலைப் பெரிதாகவே இன்ஸ்பெக்டர் எடுத்துக் கொள்ளவில்லை.' ஏய்ய்ய்... போதும் நிறுத்துடா, எங்களுக்கு அவனை எப்படிப் பிடிக்கணும் என்று தெரியும், ஆளை மட்டும் நீ, காட்டு. மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றவர் எதிரிலிருந்த அந்த 'மில்' லை பார்த்தபடியே பேஜரில் யாருக்கோ மெசேஜ் போட்டார். இங்கிருந்து கிளம்புவதா, அடுத்த ஆபரேஷன் இதே 'மில்' லில் தானா என்ற குழப்பம் டீமில் அனைவருக்கும் வந்து விட்டது...
இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மருந்து வியாபாரி மகனாக மாறிவந்த கொள்ளையன்...! - வேட்டையாடு, விளையாடு! பகுதி - 9
TAGS :
COMMENTS