[ad_1]





நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு முழுவதும் 77 கொலைகளும் 1,892 சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. மேலும் 54 கந்துவட்டி வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று ஓராண்டின் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. 




நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017-ம் வருடம் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிரம் காட்டப்பட்டது. நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற அருண்சக்தி குமார், குற்றச் செயல்களைக் குறைக்கவும் அவற்றைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துவோர் மீது குண்டாஸ் போடப்பட்டது. மணல் கொள்ளையர், கள்ளச் சாராயப் பேர்வழிகள், கஞ்சா விற்பனையாளர்கள், கந்துவட்டி பிரமுகர்கள் என 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2016-ம் ஆண்டில் 102 கொலைகள் நடைபெற்ற நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை காரணமாக கடந்த 2017-ல் 77 கொலையாக குறைந்துள்ளதாக காவல்துறையின் தகவல் தெரிவிக்கிறது. இதில் 5 ஆதாயக் கொலையும் 3 கூட்டுக் கொலையும் அடக்கம். நேரடியான 69 கொலைச் சம்பவங்களில் 67 கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்குகளில் காவல்துறையினர் திறமையாகச் செயல்பட்டதன் காரணமாக 16 வழக்குகளில் தொடர்புடைய 38 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. கந்துவட்டி வழக்குகள் மீது தீவிர கவனம் செலுத்தியதன் காரணமாக கடந்த ஆண்டில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 65 பேர் கைதுசெய்யப்பட்டனர்.



சாலை விபத்துகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கிராமப் பகுதிகளிலும் சாலை விதிகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனால் முந்தைய ஆண்டை விடவும் 7 சதவிகிதம் இறப்பு குறைந்தது. 2017-ல் சாலை விபத்தில் சிக்கி 480 பேர் உயிரிழந்தனர். 1,892 சாலை விபத்துகள் நடந்துள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 10,806 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


சாலை விதிகளை மதிக்காமலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, விபத்துகளை ஏற்படுத்துவது எனச் செயல்பட்ட 17,498 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய ஆர்.டி.ஓ-வுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் 6,849 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டு இருக்கின்றன. மாவட்டம் முழுவதும் பதிவுசெய்யப்பட்ட குற்றவழக்குகளில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளிடம் இருந்து 1,55,51,617 ரூபாய் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தாண்டில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டிய 99 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");