[ad_1]

அடுத்த பொதுத் தேர்தலுக்குள் கோதாவரி, கிருஷ்ணா நதிகளைக் காவிரியுடன் இணைக்கும் திட்டத்தைத் தொடங்க பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் அளிக்கலாம்.




ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஓடும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளைக் காவிரி நதியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி- வைகை குண்டாறு நதிகள் இணைக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் இது போன்று 9 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. திட்டச் செலவில், 90 சதவிகிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். 

கோதாவரி, கிருஷ்ணா நதிகளைக் காவிரியுடன் இணைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா நீர்பாசனத்துறை ஹரீஸ ராவ் ஆந்திர அமைச்சர் உமா மகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

தெலுங்கானா, ஆந்திர மாநிலங்கள் கிருஷ்ணா, கோதாவரி நதிகளைக் காவிரி நதியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு காட்டின. ''இந்த இரு நதிகளில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குள்ள உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும்'' என்று  மத்திய அரசு உறுதியளித்துள்ளது. `இரு மாநிலங்களும் தங்கள் தேவைகளுக்குப் பின்னரே, காவிரியில் நீர் திறந்துவிடப்படும்' என்று தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, கோதாவரியின் துணை நதியான இந்திரவதி, கிருஷ்ணா நதி, நாகர்ஜுனா சாகர் அணையிலிருந்து நெல்லூர் மாவட்டத்தில் பெண்ணாரில் கட்டப்பட்டுள்ள சோமசீலா அணைப்பகுதிக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கல்லணைக்கு நேரடியாகத் தண்ணீர் கொண்டு வரப்படும். அதேபோல், ஆந்திராவில் போலவரத்திலிருந்து பெண்ணாற்றுக்குத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டு, கல்லணைக்குக் கொண்டுவரப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.


2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிட பணிகளைத் தொடங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு இருக்கிறது. கல்லணைக்கு ஆந்திர தண்ணீர் வரும்பட்சத்தில் தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான கருத்து வேறுபாடு களையப்படும். இரு மாநில மக்களிடையேவும் நற்பெயர் சம்பாதிக்கலாம் எனப் பாரதிய ஜனதா அரசு நம்புகிறது. இன்று புதன்கிழமை நடக்கும் கூட்டத்தில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளைக் காவிரியுடன் இணைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். காவிரியுடன் இந்த இரு நதிகளும் இணைக்கப்படும்பட்சத்தில் 700 டி.எம்.சி தண்ணீர் சேமிப்பாகும். 
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");