[ad_1]

Thoothukkudi: கோவில்பட்டி பாலத்தின் அருகேயுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்தனர்.




மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர், கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதற்காக மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் மூலமாக வேனில் கிளம்பியுள்ளனர். வேன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தளவாய்புரம் அருகே இன்று அதிகாலை  சுமாா் 3 மணிக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலத்தின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், வேன் டிரைவர் மதுரை முட்டு தோப்பைச் சோ்ந்த முத்துக்காமாட்சி மற்றும்  5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டனர். உயிரிழவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. 



விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., மகேந்திரன், டி.எஸ்.பி., ஜெபராஜ், கயத்தாா் காவல் நிலைய ஆய்வாளா் ஆவுடையப்பன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்துகுறித்து கயத்தார் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன. 

உயிரிழந்தவர்கள் விவரம்:1. ரமேஷ்குமார், 2.கனையாலால், 3.டீகாம், 4.லால்சந்த், 5. ரேகா, 6. விந்தியா. 

காயம்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள்: 1. ரூட்ஸி, 2.சந்திரா, 3.சுனிதா, 4.சரளா, 5.சோனம், 6. மோக்ஸ், டிரைவர் முத்துக்காமாட்சி.  

வேன் டிரைவர் தூக்கக் கலக்கத்தில் வேனை ஓட்டிவந்ததே விபத்துக்குக் காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");