[ad_1]
மேஷம்:
10 -ல் சூரியன், 7-ல் குரு, 7,8-ல் செவ்வாய், 9,10,11 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர்.
மேஷராசி அன்பர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிரச்னைகள் தீரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டில் இருந்து வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பற்று வரவில் நேரடி கவனம் தேவைப்படும்.
அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் ஆலோசனைகள் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்களால் இருந்து வந்த போட்டிகள் மறையும். பணவரவு அதிகரிக்கும்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
சாதகமான நாள்கள்: ஜனவரி 18,19,21,24,25,29,30, பிப்ரவரி 4,5,7
சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 14, பிப்ரவரி 8,9,10
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9
பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுவதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்வதும் நல்லது.
ரிஷபம்:
9 -ல் சூரியன், 6-ல் குரு, 6,7-ல் செவ்வாய், 8,9,10 -ல் புதன், சுக்கிரன், 8 -ல் சனி, 3-ல் ராகு, 9-ல் கேது உள்ளனர்.
ரிஷபராசி அன்பர்களே! மாதத் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் கவனம் தேவை. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தத் தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் போட்டிகளைச் சந்திக்கவேண்டி வரும்.
அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்குத் தேவையில்லாத இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்படக்கூடும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாதம் இது.
கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். மாதப் பிற்பகுதியில் பாடங்களை கவனிப்பதில் கூடுதல் கவனம் தேவை.
பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றமான மாதம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
நல்ல நாள்: ஜனவரி 20,21,22,23,27,28,31
பிப்ரவரி 1,6,7,8,9,10
சந்திராஷ்டம நாள்: ஜனவரி 15,16,பிப்ரவரி 11,12
அதிர்ஷ்ட எண்கள்: 7,8
பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.
மிதுனம்:
8-ல் சூரியன், 5-ல் குரு, 5,6-ல் செவ்வாய், 7,8,9 -ல் புதன், சுக்கிரன், 7-ல் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளனர்.
மிதுனராசி அன்பர்களே! வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.
நல்ல நாள்கள்: ஜனவரி 14,15,16,22,23,24,25,29,30
பிப்ரவரி 2,3,8,9,10,11,12.
சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 17,18,19
அதிர்ஷ்ட எண்கள்: 5,7
பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் நெய்தீபம் ஏற்றுவதும் வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
கடகம்:
7-ல் சூரியன், 4-ல் குரு, 4,5-ல் செவ்வாய், 6,7,8-ல் புதன், சுக்கிரன், 6-சனி, 1-ல் ராகு, 7-ல் கேது உள்ளனர்.
கடகராசி அன்பர்களே! குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.
மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
நல்ல நாள்கள்: ஜனவரி 15,16,17,18,19,24,25,26,27,28,31,
பிப்ரவரி 4,5,11,12
சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 20,21
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும், ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நலம் சேர்க்கும்.
சிம்மம்:
6-ல் சூரியன், 3-ல் குரு, 3,4-ல் செவ்வாய், 5,6,7-ல் புதன், சுக்கிரன், 5-சனி, 12-ல் ராகு, 6-ல் கேது உள்ளனர்.
சிம்மராசி அன்பர்களே! திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.
அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
நல்ல நாள்: ஜனவரி 17,18,19,20,21,26,27,28,29,30,பிப் 2,3,6,7
சந்திராஷ்டம நாள்: ஜன 22,23
அதிர்ஷ்ட எண்கள்: 3,5
பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும்,வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடும் நலம் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் நல்லது.
கன்னி:
5 - சூரியன், 2-ல் குரு, 2,3- ல் செவ்வாய், 4,5,6 -ல் புதன், சுக்கிரன், 4-ல் சனி, 11-ல் ராகு, 5-ல் கேது உள்ளனர்.
கன்னிராசி அன்பர்களே! பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீரடையும்.
மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நல்ல நாள்: ஜன 14,20,21,22,23,29,30,31, பிப் 1,4,5,8,9,10
சந்திராஷ்டம நாள்: ஜன 24,25
அதிர்ஷ்ட எண்கள்: 5,9
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், ராகுகால துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு
TAGS :
COMMENTS