[ad_1]
திருப்பூர் அருகே டாஸ்மாக்கில் 5 ரூபாய் அதிகம் வைத்து மதுபானங்கள் விற்கப்படுவதைக் கண்டித்து மதுபோதை ஆசாமி ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியிருக்கிறார்.திருப்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபீர் (27). பிரிண்டிங் தொழிலாளியான இவர், திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுக்காடு என்னும் பகுதியில் அமைந்திருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு நேற்று சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்குச் சென்ற சபீர், அங்குள்ள ஊழியரிடம் மதுபானம் வேண்டும் எனக் கேட்க, ஊழியரோ மது பாட்டிலின் விற்பனை விலையைவிட, 5 ரூபாய் அதிகம் கேட்டதாகத் தெரிகிறது. பின்னர், மது பாட்டிலை வாங்கி முழுவதுமாகக் குடித்த சபீர், திடீரென வேதனையடைந்து அப்பகுதியில் அமைந்திருக்கும் செல்போன் டவரின்மீது ஏறியிருக்கிறார். பின்னர் டவரின் உச்சிக்குச் சென்ற அவர், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தத் தொடங்கினார். ஆனால், தரைதளத்திலிருந்து சுமார் 70 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்ததால், ஆரம்பத்தில் அவர் என்ன சொல்கிறார் என்று கீழே இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட யாருக்கும் புரியவில்லை.
காவல்துறையினர் சில மணி நேரம் போராடியும் கீழே இறங்காமல், அவர் அந்தரத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்க, உன்னுடைய கோரிக்கை சரியாகக் கேட்கவில்லை சற்று கீழே இறங்கி வந்து சொல் என்று தொடர்ந்து அவரை வலியுறுத்திக்கொண்டு இருந்தனர் காவல்துறையினர். பின்னர், நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஒருவழியாகக் கீழே இறங்கி வந்த சபீரை மீட்டு, திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, "டாஸ்மாக் கடையில் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதாகவும் திருப்பூர் மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் பிளாக்கில் மதுபானம் விற்கப்படுவதாகவும், எனவே அவற்றைக் கண்டித்தே செல்போன் டவரில் தான் ஏறினேன்'' என சபீர் தெரிவித்திருக்கிறார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`5 ரூபாய் கூடுதலாக வாங்கிட்டாங்க' - செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போதை ஆசாமி
TAGS :
Heart of Vegas Hotel and Casino (NV) - Thakasino ラッキーニッキー ラッキーニッキー planet win 365 planet win 365 2984Turning Stone Steakhouse | Tasty | Restaurant in Tuscany, NY
ReplyDelete