[ad_1]





கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில்,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து பகவதி அம்மனை தரிசித்துச் செல்கிறார்கள். தினந்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,  மதியம் 12.30-க்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். அதற்கு முன்னதாக,  அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி கோயிலின் உள்பிராகாரத்தைச் சுற்றி வலம்வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.




அதற்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த பழைமையான வெள்ளிப்பல்லக்கு தற்போது பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த விகாஸ் பட்டேல் என்கிற பக்தர், புதிதாக 50 கிலோ வெள்ளிப்பல்லக்கு செய்து, அதை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். புதிய வெள்ளிப்பல்லக்கை, கோயில் மேனேஜர் சிவராமச்சந்திரன் மற்றும் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இனிமேல், தினம்தோறும் புதிய வெள்ளிப்பல்லக்கில் பகவதி அம்மன் எழுந்தருளி உள் பிராகாரங்களைச் சுற்றி வலம் வர இருக்கிறார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");