[ad_1]
Thoothukkudi: பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், மின்சாரப் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. எனவே, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ல் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது பனி அதிகமாகப் பொழிவதால், வீடுகளில் ஃபேன், ஏ.சி ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தாத காரணத்தால், மின் தேவை குறைந்துள்ளது. இதனால் மின் தேவை, மின் உற்பத்தி அளவைவிடக் குறைவாகவே உள்ளது. அத்துடன். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழிற்சாலைகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.
இதனால், உற்பத்தியைவிட தேவை மிகவும் குறைந்திருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட மின் நிலையங்களில், மின் உற்பத்தியின் அளவைக் குறைக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில், இந்த அனல்மின் நிலையத்திலும் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதன்படி 5 யூனிட்டுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. கடந்த சில நாள்களாகவே மின் தேவை குறைவாக இருப்பதால், அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறையில் தொழிற்சாலைகள் இயங்காததால், இந்த அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் 3-வது யூனிட் தவிர, 1-வது, 2-வது, 4-வது மற்றும் 5-வது ஆகிய 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, 3-வது யூனிட்டில் மின் உற்பத்திமூலம் 210 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலைய வரலாற்றிலேயே மின் தேவை குறைவின் காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்! தூத்துக்குடி வரலாற்றில் இது முதன் முறை!
TAGS :
COMMENTS