[ad_1]
தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக்கட்டணத்தைத் திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் பேருந்துக்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துரைராஜ், ''சாதாரண உழைக்கும் மக்களை வதைக்கும் பேருந்துக் கட்டணத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசுக்கு 22,500 பேருந்துகள் ஓடுது. மழைக்காலத்துல பயணம் செஞ்சா குடைபிடித்துதான் உட்காரணும். எந்தச் சீட்டுல உட்கார்ந்து, எந்திருச்சாலும் வேட்டியும் புடவையும் கிழிஞ்சிதான் போகும். இந்த லட்சணத்துல ஓடுற பேருந்துகள் நஷ்டத்தில் ஓடுகிறது என்பது தவறானது.போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வைப்பு நிதி 7,000 கோடியை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்தாமல் தமிழக அரசு கையாடல் செய்தது. தமிழக அரசு செய்த திருட்டுத்தனத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்காகப் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம் என்று தவறான கருத்தைக் கூறுகிறது. அடுத்து கூறுவது டீசல் விலை உயர்ந்துவிட்டது, அதனால் விலையேற்றுகிறோம் என்கிறார்கள். 50 எம்.பி-க்களை வைத்துள்ள அ.தி.மு.க அரசு மானிய விலையில் டீசல் தரக்கோரி மோடி அரசை மிரட்ட வேண்டியதுதானே. அதற்கு யோக்கியதை இல்லை. ஓ.பி.எஸ்-க்கும், இ.பி.எஸ்-க்கும் தையரியம் கிடையாது. 55,000 ரூபாய் மாத வெகுமதி பெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லையாம், கட்டிக்கத் துணிமணிக்குப் பஞ்சமாம். வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகிறார்களாம். எனவே அவர்களது சம்பளத்தை 1,05000 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. அதிலும் கேவலம் என்னவென்றால், எம்.எல்.ஏ-க்களின் மாத தொலைபேசிக் கட்டணம் ரூ.5,000-லிருந்து, ரூ.7,500 ஆக மாற்றியிருக்கிறது. எந்த எம்.எல்.ஏ-யாவது தெருக்களுக்கு குடிநீர் வருகிறதா. ரேஷன் பொருள்களை ஒழுங்காகத் தருகிறார்களா. பேருந்துகள் நேரத்துக்கு வருகின்றனவா என்று எந்தப் பொதுமக்களிடமாவது பேசுகிறாரா?422 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்று செல்போன் கட்டணங்கள் நடைமுறையில் இருக்கு. இவர்கள் யாரை ஏமாற்ற இவ்வளவு கூடுதல் ரூபாயை வழங்குகிறார்கள். அரசுப் பேருந்துகளில் அரசியல்வாதிகளோ எம்.பி, எம்.எல்.ஏ-க்களோ, வார்டு கவுன்சிலர்கூடப் போவதில்லை. சாதாரண மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்துக்கு அலுவலகம் மற்றும் கடைகளில் பணிபுரிவோர், காய்கறி விற்று அன்றாடம் பிழைப்போர் இப்படிப்பட்ட ஏழை, எளியவர்கள் பயணிக்கும் பேருந்துக்கட்டணத்தை உயர்த்தியது நியாயமா. போக்குவரத்துத் துறையில் நடைபெறும் மாபெரும் ஊழலைக் களைந்தாலே பல கோடி ரூபாய் லாபம் வரும். செய்ய வேண்டியதை விட்டுவிட்டு, ஒன்றும் அறியாத பாமரன் தலையில் பேருந்துக்கட்டணத்தைச் சுமத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது'' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
422 ரூபாயில் 3 மாதத்துக்கு அன்லிமிடெட்; எம்.எல்.ஏ-க்கு ஒரு மாதத்துக்கு 7,500 ரூபாய்! பொங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
TAGS :
COMMENTS