[ad_1]
இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.
நடப்பு நிதியாண்டில் இந்திய அரசு வாங்க வேண்டியிருக்கும் கூடுதல் கடன் ரூ.50,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.20,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. பங்குச்சந்தையில் முதலீடு குவிந்தது. நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பல நிறுவனங்களின் நிதிநிலை சிறப்பாகவும் லாபகரமான நிலையிலும் இருக்கிறது. இது வெளிநாட்டு முதலீட்டை அதிகம் ஈர்த்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 310.77 புள்ளிகள் ஏற்றம் கண்டு 35,081.82 புள்ளிகளில் நிலைகொண்டது. இன்று அன்னிய ஃபோர்ட் போலியோ முதலீட்டாளர்கள் ரூ.693.17 கோடியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பங்குகளை வாங்கினர். பொதுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனப் பங்குகளின் விலை இன்று அதிக அளவில் உயர்ந்தது. குறிப்பாக விப்ரோ, ஆக்ஸிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனப்பங்குகள் அதிக லாபத்தைச் சந்தித்தன. கெயில், டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிஃப்டி 88.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 10,788.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!
TAGS :
COMMENTS