[ad_1]
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால, இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி, 150 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில், முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு லீட் ரன்கள் இருக்கவே, இந்திய அணிக்கு டார்கெட்டாக 287 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாகத் தொடங்கி தொடர்ந்து விளையாடி வருகிறது. 5 ஓவர் முடிவில் 11 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் இந்தியா ஆடி வருகிறது. ஓபனர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களத்தில் உள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இந்திய பௌலர்கள் அசத்தல்... தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட்!
TAGS :
COMMENTS