[ad_1]
Chennai: ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் மாநாடு நடைபெறும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
2ஜி வழக்கில் சோதனைகளைக் கடந்து வழக்கிலிருந்து விடுதலையான ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு பாராட்டு
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னைகளை முதல்வர் தலையிட்டு பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் மேற்கொள்ளும் ஆய்வைத் தடுத்த நிறுத்தவேண்டும்.
முத்தலாக் தடைச்சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவேண்டும்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் ஆகிய மசோதாக்களை மறு ஆய்வு செய்யவேண்டும்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை அளிக்கவேண்டும்.
நிபுணர் குழுவை உடனடியாக அமைத்து மாநில நிதிநிலைமை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தவேண்டும்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மார்ச் மாதம் 24, 25-ம் தேதிகளில் ஈரோட்டில் தி.மு.க மாநாடு நடத்தப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மார்ச் 24, 25-ல் தி.மு.க மாநாடு..! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
TAGS :
COMMENTS