[ad_1]
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, கடந்த 20 வருடங்களுக்கு மேலாகப் பல்வேறு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டப்பட்ட மாட்டுத்தீவன வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியானது. லாலு உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் பயணித்த பாதை......
1996ஜனவரி
சாய்பாசா நகரின் துணை ஆணையர் அமித் காரே, கால்நடை பராமரிப்புத் துறையில் நடத்திய சோதனையில் மாட்டுத்தீவன ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது.
மார்ச்
பாட்னா உயர் நீதிமன்றம் மாட்டுத்தீவன வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிவு (FIR) செய்து விசாரணையைத் தொடங்கியது. சுமார் 950 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
1997ஜூன்
பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் பெயரும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜூலை
லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலகி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். லாலுவின் மனைவி ராபிரி தேவி பீகார் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.
2001அக்டோபர்
பீகாரிலிருந்து தனிமாநிலமாக ஜார்கண்ட் பிரிக்கப்பட்டதும் உச்ச நீதிமன்றம் கால்நடை தீவன வழக்கை ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
2002பிப்ரவரி
ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
2007
ஜூன்
ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் லாலு உள்ளிட்ட 58 பேரை கால்நடை தீவனக் கணக்கில் சாய்பாசா கருவூலத்திலிருந்து 48 கோடி முறைகேடு செய்ததாகக் கூறி குற்றவாளி என அறிவித்து இரண்டரை ஆண்டு முதல் 6 ஆண்டு வரை தண்டனை விதித்தது.
2012மார்ச்
லாலு பிரசாத் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மீது பாங்கா மற்றும் பாகல்பூர் கால்நடைக் கருவூலத்தில் 47 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றங்கள் கட்டமைக்கப்பட்டன.
2013செப்டெம்பர்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 44 பேர் மீது வழக்குப் பதிவானது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லாலுவின் லோக்சபா உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு சிபிஐ நீதிபதி ப்ரவாஸ் குமார் சிங் உத்தரவிட்டர்.
டிசம்பர்
உச்ச நீதிமன்றம் லாலுவிற்கு ஜாமீன் வழங்கியது.
2017மே 8
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தியோஹர் கருவூலத்தில் கால்நடை தீவனக் கணக்கில் 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
டிசம்பர் 13
இந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத், நீதிபதி பிரதீப் குமார் ஆகியோர் விசாரித்து வந்தனர். கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்த வழக்கின் இறுதி வாதமானது முடிவடைந்தது.
டிசம்பர் 23
லாலு உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜெகன்நாத்மிஸ்ரா உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்தது.
ஜனவரி 3 & 4
இந்த வழக்கின் முழு தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் என்பவர் மரணமடைந்ததால் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 4-ம் தேதியும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை, ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
22 வருடம்.. 950 கோடி.. 17 குற்றவாளிகள்.. மாட்டுத்தீவன ஊழல் கடந்து வந்த பாதை!
TAGS :
COMMENTS