[ad_1]
''ராணுவப் படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது, 2022 ஆம் ஆண்டுக்குள் நமது இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றை அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.'' என்று பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசினார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி பேசுகையில், ''மகர சங்கராந்தி விழாவை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினோம். இந்தப் பண்டிகைப் பருவம் வளத்திற்கான தூண்டுதல். இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக பலரது வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் தரும் திட்டத்தைத் தொடங்கி வைக்க ராஜஸ்தான் வந்துள்ளேன். இந்தத் தருணம் காரியங்கள் சித்தி அடைவதற்கான உறுதிமொழி ஏற்கும் தருணம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் 2022 ஆம் ஆண்டுக்குள் நமது இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றை அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ராணுவப் படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதனைச் சாத்தியமாக்க அரசு பாடுபட்டுள்ளது. மக்கள் நிதித் திட்டம் மூலம் ஏழைகள் தற்போது வங்கிச் சேவைகளை அணுக முடிந்திருக்கிறது. சமையல் எரிவாயுவுக்கான உஜ்வலா திட்டத்தின் மூலம் மின்சார வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று பேசினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
2022-ம் ஆண்டு லட்சியங்கள்..! அடையாளம் காண மோடி அழைப்பு
TAGS :
COMMENTS