[ad_1]
புத்தாண்டுக்கு நாம எடுக்கிற உறுதிமொழியை வீட்ல, வேலை பாக்குற இடத்துல சொல்லுறோமோ இல்லையோ ட்விட்டர்ல சொல்லிடுறோம். இதுல பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இந்த 2018ம் ஆண்டை பிரபலங்கள் எப்படி ட்விட்டரில் தொடங்கி இருக்காங்க தெரியுமா?
ஹேப்பி மோடி:
அடிக்கடி 'புதிய இந்தியா' பிறந்தது என்று ட்வீட் செய்யும் நம் பிரதமர் , புது வருடம் பிறந்ததும் செய்த முதல் ட்வீட் புத்தாண்டு வாழ்த்து. அதன் பின் ஒரு பிறந்தநாள் வாழ்த்து. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி சந்தோஷமாக வருடத்தை தொடங்கியுள்ளார் மோடி.
Warm birthday greetings to Manipur CM @NBirenSingh Ji. May he be blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) January 1, 2018
ஆங்க்ரி ட்ரம்ப் :
ட்விட்டர் சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த ஆண்டு ஆரம்பத்தில் செய்த ட்வீட்டிலேயே தன் ஆங்க்ரி மோடை ஆன் செய்துள்ளார். 'பாகிஸ்தானுக்கு கடந்த 15 வருடத்தில் அமெரிக்கா 33 பில்லியன் டாலர்கள் கொடுத்தது முட்டாள்தனம்' என்று தன் கோபத்தை பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். ட்ரம்ப் கூறுவது அர்த்தமற்றதுனு பாகிஸ்தான் பதில் தர ஆங்க்ரி பேர்டாகவே மாறியிருக்கிறார் அமெரிக்க அதிபர்.
The United States has foolishly given Pakistan more than 33 billion dollars in aid over the last 15 years, and they have given us nothing but lies & deceit, thinking of our leaders as fools. They give safe haven to the terrorists we hunt in Afghanistan, with little help. No more!
— Donald J. Trump (@realDonaldTrump) January 1, 2018
வாவ் சச்சின்
நியூ இயர் கொண்டாட்டதிற்காக தன் நண்பர்களுக்கு 'பார்பெக்யூ சிக்கன்' செய்துகொடுத்த வீடியோவை ட்வீட்டாக வெளியிட்டு தன் ரசிகர்களை 'வாவ்' சொல்ல வைத்துள்ளார் சச்சின்! வீடியோ செம வைரல் லட்சம் வியூஸைத் தாண்டி தெறிக்கவிடுகிறது..
It was a pleasure to cook for my friends on New Year’s Eve. I am glad all of them enjoyed and are still licking their fingers
Hope you all had a great New Year's Eve as well. Wishing you all a fantastic 2018. Stay blessed always. pic.twitter.com/aOPVJUscx4
— sachin tendulkar (@sachin_rt) January 2, 2018
லைக் ரஹ்மான்
சாதாரண புத்தாண்டு வாழ்த்தாக அல்லாமல் 'இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சி, சுயத் திறமைகளைக் கண்டுபிடித்தல், கருணை மற்றும் பராக்கா(கடவுளுடன் நெருங்கிய ஆன்மிகம்) ஆகியவை நிறைந்ததாக இருக்கட்டும்' என்று 'இன்ஸ்ப்ரேஷனல்' ட்வீட் செய்து ரசிகர்களின் 'லைக்'ஸை அள்ளினார் ரஹ்மான்.
Dearest Friends, Wishing you all an amazing year filled with happiness, self discoveries, compassion and Barakah..God bless !
— A.R.Rahman (@arrahman) December 31, 2017
ஹா! ஹா! ராஜா
'இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண்' என்று தொடங்கி டி.ஆர் ஸ்டைலில் வரிசையாக ஆன்மிகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு 'ஆனால் இங்கு ஆன்மிக அரசியல். சபாஷ்' என்று ரியாக்ட் செய்துள்ளார் ஹெச்.ராஜா. ஏற்கெனவே ரஜினியை பிஜேபி முகம் என நெட்டிசன்கள் கூறும் வேளையில் இவரது இந்த ட்விட் மேலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியேமீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மிக அரசியல். சபாஷ்
— H Raja (@HRajaBJP) January 1, 2018
கதம் கதம் ரஜினி
21 ஆண்டுகளாக ஆண்டவன் கையில் இருந்த அரசியல் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி கைக்கு வந்தது. ஜனவரி 1-ம் தேதி வீடியோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி. உண்மை.. உழைப்பு.. உயர்வு.. என்று 'பாபா' முத்திரையோடு தொடங்கும் அந்த வீடியோவில், 'தமிழ்நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர என் ரசிகர்மன்ற இணையதளத்தில் பதிவிடுங்கள்' என்று பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
pic.twitter.com/jnqZv1iWGz
— Rajinikanth (@superstarrajini) January 1, 2018
லவ் விராட்:
தென்னாப்பிரிக்காவிலிருந்து விராட் தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் செல்ஃபியை வெளியிட்டு அனைவருக்கும் தன் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதே பதிவை அனுஷ்கா தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக ஒரே பதிவை இருவர் டைம்லைனிலும் பார்க்க முடிகிறது..
Wishing you all a very happy, healthy and prosperous New year. Love and light to all.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஹேப்பி மோடி... ஆங்க்ரி ட்ரம்ப்... வாவ் சச்சின்... பிரபலங்களின் 2018 ட்விட் ரீயாக்ஷன்
TAGS :
COMMENTS