[ad_1]

Chennai: சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என ஆக்ஷன் நிறைந்த தொடர்களோடு 2017 நிறைவடைந்தது. 2015-ல் உலகக்கோப்பை, 2016-ல் டி-20 உலகக்கோப்பை, சென்ற ஆண்டு - சாம்பியன்ஸ் டிராபி என ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்தன. ஆனால், 2018-ல் நீங்கள் எதிர்பார்க்கும் ஐ.சி.சி தொடர் இல்லை. 2009-க்கு பிறகு ஐ.சி.சி தொடர் இல்லாத வருடம் இந்த வருடமே. இதை ஈடுகட்டும் வகையில் பல்வேறு 'Bilateral' (இரு நாடுகளுக்கு இடையிலான) தொடர்கள் இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தக் காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் முக்கியமான தொடர்கள் என்னென்னவென்று பார்ப்போம்...

ஜனவரி & பிப்ரவரி: 




2018-ன் ஆரம்பமே அதிரடியாய் ஆரம்பிக்கிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் ஜனவரி 5-ல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு, சொந்த மண்ணில் இந்தியா பல்வேறு வெற்றிகளைக் குவித்தது. ஆனாலும், வெளிநாட்டு மண்ணில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கோலி அண்ட் கோவுக்கு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது எளிதல்ல. ஸ்டெய்ன், டிவில்லியர்ஸ் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளது அவர்களுக்குப் பலம்.

3 டெஸ்ட் 
6 ஒரு நாள் போட்டி 
3 டி20

2018-ல் சீனியர் அணிகளுக்கான ஐ.சி.சி தொடர்தான் இல்லை. ஆனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நியூஸிலாந்தில் தொடங்குகிறது. பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி டிராவிட் பயிற்சியில் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாஹின் மகன், தென்னாப்பிரிக்க அணியில் மகாயா நிதினியின் மகன் என, அடுத்த தலைமுறை களம் காண்பதால், தங்கள் நாட்டின் எதிர்கால நட்சத்திரங்களைப் பார்ப்பதில் கிரிக்கெட் போர்டுகள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் ஆவலாக இருப்பார்கள்.

முதல் போட்டி: 13 ஜனவரி 
இறுதி போட்டி:  03 பிப்ரவரி 

மார்ச் & ஏப்ரல்:

ஆஸ்திரேலியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்கா செல்கிறது. 434, 438 ரன்சேஸ் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டியும், ஆஷஸ், இந்தியா - பாகிஸ்தான் அளவுக்கு எதிர்பார்ப்பான தொடராக மாறிவிட்டது. அதனால், இந்தத் தொடரை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனான டெஸ்ட் தொடரை வென்றால் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்க, தென்னாப்பிரிக்க அணிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது.   

முதல் டெஸ்ட் : 01 மார்ச் 
கடைசி டெஸ்ட் :  30 மார்ச் 

ஏப்ரல் & மே:



கோடை விடுமுறையில் என்ன கிரிக்கெட் போட்டி நடக்கும் என ஊருக்கே தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு வருடங்களுக்கு பிறகு தோனி தலைமையில் களம் இறங்கப் போகிறது. 'தி பாய்ஸ் ஆர் பேக்' என்று சென்னை இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டது. ஜனவரி 27, 28 தேதிகளில் வீரர்கள் ஏலம் தொடங்கி, ஃபைனல் வரை மெர்சல்தான். முதன்முறையாக ஐ.பி.எல் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகப்போகிறது.

முதல் போட்டி: 4 ஏப்ரல் 
இறுதி போட்டி: 27 மே 

ஜூலை  & செப்டம்பர்:  

இந்தியாவின் அடுத்த சவால் மிக்க தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. கோலி இதுவரை ஜொலிக்காத ஓர் இடம் இங்கிலாந்து. இந்திய வீரர்கள் பொதுவாக 'ஸ்விங் அண்ட் சீமிங்' கண்டிஷனில் தடுமாறக்  கூடியவர்கள். இந்தத் தொடர் அவர்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். கேப்டனாக, பேட்ஸ்மேனாக...கோலியின்மீது டன் கணக்கில் பிரஷர் இருக்கும். ஜொலித்தால் - நிச்சயம் உலக நாயகன் அவர்தான்!

5 டெஸ்ட் 
3 ஒரு நாள் 
3  டி20

செப்டம்பர் & அக்டோபர்:

கடந்த வருடம்  டி20 தொடராக நடந்த ஆசிய கோப்பை இந்த வருடம் ஒரு நாள் தொடராக நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா கோப்பையை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது.  செப்டம்பர் 15-ல் தொடங்கும் இத்தொடரின் போட்டி அட்டவணை மற்றும் பங்குபெறும் அணிகள் குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. மொத்தம் 11 போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.   
பெரிய அணிகளிடமெல்லாம் பஞ்சராகும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வருகிறது. கடினமான தொடருக்குப் பின் இந்தத் தொடர் அமைந்தாலும், இந்தியா இதை எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அக்டோபர் 1- ல் முதல் போட்டி தொடங்குகிறது.

3 டெஸ்ட் 
5 ஒரு நாள் 
1  டி20

நவம்பர்:



கடந்த வருடம் நடந்த மகளிர் உலகக் கோப்பை நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரும் நல்ல வரவேற்பைப்பெறும் என ஐ.சி.சி எதிர்பார்க்கிறது. 50 ஓவர் உலகக்கோப்பையின் ஃபைனல்வரை சென்றதால், இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் போட்டி: 3 நவம்பர் 
இறுதி போட்டி: 24 நவம்பர

டிசம்பர்:


இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்க மண்ணில் சவாலோடு தொடங்கும் 2018, அதைவிடப் பெரிய சவாலோடு ஆஸ்திரேலிய மண்ணில் முடியப்போகிறது. வருடக் கடைசியில் இரு அணிகளும் ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் ஆடுகின்றன. இந்தியாவில் டெஸ்ட் தொடரை தோற்றதற்குப் பழிதீர்க்க ஆஸ்திரேலியாவும், ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்கும். ஸ்மித் மற்றும் கோலி போட்டி போட்டுக் கொண்டு சதமடிப்பார்கள். இருவரின் ரன்வேட்டை அடுத்த ஆண்டும் தொடர்ந்தால், பௌலர்கள் காலி!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");