[ad_1]
ஸ்டாலின், எடப்பாடி, தினகரன் என அடுத்தகட்ட தலைவர்களோடும் ஏகப்பட்ட பிரேக்கிங் நியூஸ், குழப்பங்கள், கூத்துகளோடும் கடந்துவிட்டது 2017. இப்போது 2018 வந்துவிட்டதால், இனி இந்தத் தலைவர்கள் எப்படியெல்லாம் ட்ரெண்ட் மாற்றினால் இந்த ஆண்டிலும் கலக்கலாம்னு கொஞ்சம் கலகல ஐடியா கொடுக்கலாம் மக்களே!
ஸ்டாலின்:
நீங்க என்னதான் நியாயமா அரசியல் பண்ணணும்னு நினைச்சாலும், கலைஞர் அளவுக்கு ஸ்டாலின் இல்லைனுதான் ஊருக்குள்ள பேசுறாங்க! தலைவர் மாதிரி கூலிங் கிளாஸ் போட்டா மட்டும் போதாது, அப்டியே ஒரு மஞ்சள் சால்வையும் போர்த்திக்கோங்க! (காவி சால்வை டேஞ்சர்!) அப்டியே கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணி பேப்பர் குறிப்புகளைப் பார்க்காமல், "இந்திராவின் பேரனே வருக! இந்தியாவை ஆட்சி புரிக!"ன்னு மேடையில் ராகுலை வாழ்த்திப் பேசப் பழகுங்க! "தாய்க்கழகம் உங்களை வரவேற்கிறது"ன்னு சொல்லி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை குழப்பிவிட்டு வளைக்கப் பாருங்க. ஆட்சியைக் கலைக்கப் பாருங்க. சும்மா சும்மா மூணு மாசம், நாலு மாசம்னு கெடு கொடுத்தா, தொண்டர்கள் கடுப்பாகுறாங்கல்ல.
ஹெச்.ராஜா:
பாஸ், இன்னும் எத்தனை நாளைக்கு விஜய்க்கு எதிராகவும், குஷ்புவுக்கு எதிராகவும் கம்பு சுத்திகிட்டு இருப்பீங்க? உங்க லெவலே வேற! இப்ப ட்ரென்டுக்கு ட்ரம்ப்புக்கு எதிரா, "அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்குத் தொல்லைகொடுத்தா, சும்மா இருக்க மாட்டான் இந்த கோட்டைச்சாமி!"ங்கிற ரேஞ்சுல உதார் விடுங்க! அதிரடி பேசும் வடகொரிய அதிபருக்கு எதிரா, "உன்னோட ஏவுகணைய இங்கயிருந்தே கல்லால அடிச்சு உடைப்பேன், கடப்பாறையால குத்திப் பிளப்பேன்"னு டெரரா பேட்டிகொடுத்து இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ்ல இறங்குங்க தல! அப்பத்தான் மோடியே உங்களோட திறமையைப் பார்த்து மெர்சல் ஆவாப்ல. அப்டியே அடுத்த பிரதமராகுற வழியப் பாருங்க!
செல்லூர் ராஜு:
அணைக்கட்டுல இருக்கிற தண்ணிய ஆவியாகாம தெர்மக்கோலால தடுத்து பெயர் வாங்கிட்டீங்க... அடுத்ததா, ஒயின்ஷாப்ல குடுக்குற டூப்ளிகேட் தண்ணிய தடுக்குறதுக்கும், கூலிங் பீர் உண்மையிலேயே கூலா கிடைக்கிறதுக்கும் ஏதாவது தெர்மக் 'கூல்' ஐடியா கண்டுபிடிக்கலாம்! சரக்கு சப்புனு இருக்குன்னும், கூலிங் பீர் கூலா இல்லைன்னும் ஏகப்பட்ட கம்ப்ளெய்ன்ட் வருது. அது மட்டும் கண்டுபுடிச்சிட்டா, எல்லா ஒயின்ஷாப்புலயும் உங்களுக்கு ஒரு சிலை கன்பார்ம்! தம்பிங்களுக்கு ஏதாவது பார்த்துப் பண்ணுங்கண்ணே!
தமிழிசை:
நீங்க சூதுவாது தெரியாமலேயே வளர்ந்துட்டீங்க மேடம். உங்களுக்கு எதிரி வேற கட்சியில இல்ல, உங்களைச் சுத்தியேதான் இருக்காங்கன்னு இனியாவது புரிஞ்சுகிட்டு, அவங்களைக் களையெடுங்க! அதைவிட முக்கியம், ஆர்.கே.நகர்ல நோட்டாவுல ஓட்டுப்போட்ட ஸ்லீப்பர் செல்கள் அம்புட்டு பேரும் உங்க கட்சி ஆளுங்கதான்னு உங்க உள்மனசு சொல்லியிருக்குமே... அவுங்களைக் காலி பண்ணப் பாருங்க! காங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொல்றதும், நீங்க தாமரை மலரும்னு சொல்றதும் ஒண்ணு தான்! அட்லீஸ்ட், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்துலயாவது தாமரைய மலரவைக்க இந்த வருஷம் முயற்சிபண்ணுங்க மேடம்!
எடப்பாடி:
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டுல மட்டும் கொண்டாடி விளம்பரம் பண்ணினா போதுமா தலைவரே? பல்பொடி விளம்பரம் மாதிரி சிரிக்கிற நீங்க, அதே பல்பொடி விளம்பரத்துல சொல்ற மாதிரி இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர்னு டூர் அடிச்சு, நூற்றாண்டு விழாவையே 100 முறை நடத்தி சாதனை படைக்கணும்! தமிழ்நாடு கவர்மென்ட்ட கவனிக்க வேற ஒரு குருநாதர் இருக்கிறப்ப உங்களுக்கென்ன பிரச்சனை?
தினகரன்:
ஆர்.கே. நகர்ல ஜெயிச்சதையே இன்னும் எம்புட்டு நாளைக்கு பெருமையா சொல்வீங்க? நீங்க குடுத்த டோக்கனுக்கு பணம் செட்டில் பண்ணலைனு மக்களெல்லாம் குக்கர் மாதிரி கொதிச்சுப்போயிருக்காங்க. தொகுதிக்குள்ள போனாலும் சிக்கல்தான்! எப்டியாவது ஆன்லைன்லயாவது பணத்தை செட்டில் பண்ணப் பாருங்க! எப்டியோ சட்டசபைக்குள்ள நுழைஞ்சாச்சு. இனிமேல், அங்க பேசுறப்பல்லாம் குத்துமதிப்பா அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பக்கம் பார்த்து, "எனதருமை ஸ்லீப்பர் செல்களே..."ன்னு எடுத்து விடுங்க! என்னைச் சொல்றாரா, உன்னைச் சொல்றாரான்னு அவங்களுக்குள்ளயே அடிச்சுப்பாங்க. எங்களுக்கும் என்டர்டெயின்மென்ட்டா இருக்கும்ல!
ஓ.பி.எஸ்:
தர்மயுத்தம்கிற வார்த்தையை காமெடியாக்குனதுதான் போன வருஷம் உங்க சாதனையே! இனிமேல் இப்படி எந்த வார்த்தையையும் டேமேஜ் பண்ண மாட்டேன்னு சபதம் எடுக்கலாம்! குறிப்பா, மெரினா கடற்கரைக்குப் போனமா, காற்று வாங்கிட்டு வந்தமான்னுதான் இருப்பேன்... சமாதியில உட்கார்ந்து தியானம் பண்ற சீனெல்லாம் போட மாட்டேன்னு உறுதியெடுக்கலாம். இன்னொண்ணு, அம்மாவோட முந்தானையப் புடிச்சுக்கிட்டு திரியிற குழந்தை மாதிரி முதல்வர் போற இடத்துக்கெல்லாம் கூடவே போவேன்னு அடம்பிடிக்க மாட்டேன்னு சபதம் எடுக்கலாம்.
குருமூர்த்தி:
சிங்கம் இளைச்சால் எலியெல்லாம் ஏறி விளையாடுமாம்! குருவுக்கு நாக்குல சனின்னு எஸ்.வி.சேகரெல்லாம் உங்களை கலாய்க்கிற அளவுக்கு வந்துட்டீங்க! இனிமேல், ஆன்லைன் அக்கவுன்ட் தவிர ட்விட்டர், ஃபேஸ்புக்னு அம்புட்டு அக்கவுன்ட்டையும் க்ளோஸ் பண்ணுங்க! உங்க ஆளுங்களுக்குதான் எல்லா டி.வி-யிலயும் விவாதம்பண்ண வேகன்ஸி இருக்கே... அதை யூஸ் பண்ணுங்க! விவாதம் பண்றப்ப, எதுக்கும் கையோட டிக்ஸ்னரிய கொண்டுபோங்க பாஸ்! பாஸ் என்றால் தேர்ச்சி என்றும் அர்த்தமுண்டு.
வைகோ:
உலகம் ஒரு உருண்டைங்கிறத நிரூபிக்க உங்களைக் காட்டினாலே போதும்! வாரிசு அரசியலுக்கு எதிரா தி.மு.க-விலிருந்து கிளம்பிய உங்களோட நடைப்பயணம், ஒரு தலைமுறையா சுற்றி, கடைசியில அந்த வாரிசுக்கே ஆதரவு தெரிவிக்கிற மாதிரி வந்துடுச்சு! ஆனா, அதுக்குள்ள உங்களுக்கு சேதாரம் ரொம்ப அதிகம் பாஸ்! உங்களோட தடாலடிகளால சேதாரம் ஆனவங்க கொஞ்சநஞ்சமில்ல. இனிமேலும் தயங்காமல் முன்னொருகாலத்தில் இருந்த மாதிரி தி.மு.க-வோட போர்வாளா மாறுங்க பாஸ். உங்களோட குரல் தமிழக சட்டசபையில் ஒலிக்கிற நாள் வெகுதொலைவில் இல்லை!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஸ்டாலின், தினகரன், எடப்பாடி, குருமூர்த்தி... - 2018ல் நீங்க இதெல்லாம் பண்ணணும் தலைவர்களே!
TAGS :
COMMENTS