[ad_1]
2017ம் ஆண்டு எப்படி இருந்தது என்பது பற்றியும், இந்த 2018 எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான டி.டி.வி. தினகரன் மனம் திறந்த பேட்டி....
1. 2017-ல் உங்களுக்கு மிகவும் சந்தோஷமளித்த ஒரு விஷயம்?
ஆர். கே நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு அளித்த வெற்றி.
2) 2017-ல் உங்களுக்கு மிகவும் வேதனையளித்த ஒரு விஷயம்?
அம்மாவின் மரணத்தைத் தொடர்ந்து அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் சிறைச்சாலைக்கு சென்றது..அவர் சிறைச்சாலையில் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயம். தம்பி, அத்தை எல்லாம் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். அரசியல் நோக்கத்தால் போடப்பட்ட வழக்குகளால் அவர்கள் தண்டிக்கப்பட்டது வேதனையளிக்கும் விஷயம்.
3) 2017-ல் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை?
துரோகம்
4) 2017-ல் உங்களுக்குப் பிடித்த ஒருவர்... எரிச்சலூட்டிய ஒருவர்?
* எனக்கு வெற்றிவேலை ரொம்ப பிடிக்கும். அம்மா மீதும் பொதுச் செயலாளர் மீதும் அவர் வைத்திருக்கிற நம்பிக்கை, செயல்பாடு , அரசியலுக்கு அப்பாற்பாட்டு பொதுச் செயலாளர் மீது அவர் வைத்திருக்கும் அன்பு.
* எனக்கு மிகவும் எரிச்சலூட்டியவர் முன்னாள் நண்பர் ஒ. பன்னீர்செல்வம். இவ்வளவு துரோக சிந்தனையோடு பின்னால் இருந்திருக்கிறார். அவரது நடவடிக்கை எனக்கு எரிச்சலுட்டியது.
5) 2017-ல் உங்களைப் பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது?
* ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் என்னைப் பற்றி ஒரு பேட்டியில், 'ரொம்ப பாவமா...குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார்' என்று குறிப்பிட்டார். எனது இயற்கையான முகத்தோற்றம் அவருக்கு அப்படி தெரிந்து அதை வைத்து அதற்கு உள் அர்த்தத்துடன் பேசுற கிண்டல் எனக்குப் பிடித்திருந்தது.
6) 2017-யில் பிடித்த... பயணம்? பார்த்த சினிமா?
* பயணம் என்று எடுத்துக்கொண்டால்... அரசியல்ரீதியான சுற்றுப்பயணங்களின் போது தொண்டர்களின் ஆர்வமும், பொதுமக்களின் வரவேற்பும் எனக்கு பிடித்திருந்தது.
* சினிமா... பாகுபலி
7) 2017-ஐப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்...!
* சரித்திரத்தில் இல்லாத துரோகத்தை சந்தித்து அதே நேரத்தில் அதற்கெல்லாம் முடிவு கட்டுகிற மாதிரி ஆர்.கே. நகர் மக்கள் எங்களுக்கு கொடுத்த வெற்றி.
8) 2018-க்கு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளும் ஸ்லோகன்/மந்திரம் என்ன?
* துரோகத்தை எல்லாம் முழுமையாக வென்று 2018ல் மக்களின் ஆதரவோடு உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம். இதுதான் என்னுடைய ஸ்லோகன்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
2018ல் உண்மையான அம்மாவின் ஆட்சி...இது தினகரனின் ஸ்லோகன்! #HNY2018
TAGS :
COMMENTS