[ad_1]





அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட மணல்சரிவில் சிக்கி 17 பேர் பலியாகியுள்ளனர். 




கலிஃபோர்னியா மாகாணத்தில், மான்டிசிட்டோப் பகுதியில் கடுமையான மணல்சரிவு ஏற்பட்டது. அந்த மணல் சரிவினால் கலிஃபோர்னியா மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மணல்சரிவில் சிக்கி 17 பேர்வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மணல்சரிவுகுறித்து தெரிவித்த மாகண நிர்வாகம், 'இந்த மணல்சரிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணல்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்க்கும்போது, உலகப் போர் நடந்த களம் போன்று உள்ளது. காணாமல்போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது' என்று தெரிவித்துள்ளது. சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள், மணலுக்கடியில் சிக்கியுள்ளன. கடுமையான மழையின் காரணமந்த்தான் இந்த மணல்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 5.5 இன்ச் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");