[ad_1]

Coimbatore: கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை வருகின்ற 15-ம் தேதியுடன் மூட இருப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.




 

கடந்த 1964-ம் ஆண்டு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் காமராஜர் ஆகியோரது முயற்சியால், கோவை, பிரஸ்காலனியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின்கீழ், அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. சுமார் 132 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த அச்சகத்தில், 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். ஆனால், அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 45 ஒப்பந்தப் பணியாளர்களுடன் அச்சகம் இயங்குகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இலக்கை பூர்த்திசெய்து, ரூ.1.5 கோடி லாபம் ஈட்டிவருகிறது.

இந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆகக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதையடுத்து, கோவை அச்சகத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதியுடன், கோவை அச்சகம் மூடப்படும் என்று மத்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


மேலும், அச்சகத்தில் பணிபுரிந்துவரும் 36 ஊழியர்களையும், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தவிடப்பட்டுள்ளது. அச்சகத்தில் பணிபுரிந்து வருபவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள். அதிலும், பலருக்கு உடல்நலக்குறைபாடு வேறு உள்ளது. இதுகுறித்து அச்சக ஊழியர்களிடம் பேசினோம், ’’போன மாசமே எங்களுக்கு ரிலிவிங் ஆர்டர் கொடுத்துட்டாங்க. எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம். தலைவர்களைச் சந்திச்சோம். மத்திய அமைச்சர சந்திச்சப்பகூட, எங்களுக்கு கோவையிலோ, தமிழகத்திலோ பணிபுரிய ஏற்பாடு பண்றேண்ணு சொன்னாரு. இப்படி நடக்கும்னு நாங்க யாரும் எதிர்பார்க்கல’’ என்றனர். இந்நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, கோவை பெரியநாயக்கன்பாளையம் முதல் பிரஸ்காலனி வரை நாளை முழு அடைப்புப் போராட்டம் நடக்க உள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");