[ad_1]

பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 114 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துவருகிறார். 






குடும்பத்தில் அவருக்கு இளையவர்கள் பலரும் படுத்த படுக்கையாக சிகிச்சைபெற்றுவரும்நிலையில், கர்னைல் சிங் எனும் அந்த முதியவர், ஆரோக்கியமாக நடமாடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில், இளைஞர்கள் பலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி  வாழ்க்கை திசைமாறிவரும் சூழல் இருக்கிறது. ஆனால் இளைஞர்கள், போதைப்பொருள்களின் பிடியிலிருந்து முழுவதுமாக மீண்டு வர வேண்டும் என்கிறார் இந்த 114 வயது இளைஞர். தனது குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டோருடன் வசித்துவருகிறார். 
இதுகுறித்து பேசிய கர்னைல் சிங், ‘தினசரி அதிகாலை 5 மணிக்கே எழுந்து, நடைப்பயிற்சிக்குச் சென்றுவிடுவேன். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நான் கடைப்பிடித்துவருகிறேன். அதேபோல, ஆல்கஹால் மற்றும் போதை வஸ்துக்களிலிருந்து நான் எப்போதும் ஒதுங்கியே இருக்கிறேன். இன்றைய இளைஞர்கள், ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்களிடமிருந்து தங்களை விலக்கியே வைத்திருக்க வேண்டும்’ என்கிறார்.   
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");