[ad_1]

                             

முண்டேல்பாஜூ பேசுவதைப் பெரிது படுத்தாமல் நவீன் சார்,  'மில்' லையே உற்றுப் பார்த்ததால், நாங்களும், அடுத்து நுழைய வேண்டியது அந்த 'மில்' லுக்குள்தான் என்று எங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு விட்டோம். அப்போது எஸ்.ஐ. ராஜ்குமார் சாரிடம், 'சார், 'மில்' லுக்குள் நாங்கள் போனதும் அடுத்த பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்துடுங்க சார்' என்று டீமில் இருந்த ஒரு கான்ஸ்டபிள்  சொல்ல ஆரம்பித்து விட்டார். இரண்டு நாள்களாக பறவைகள் போல் கொஞ்சமாக சாப்பிட்டு, கொஞ்சமாகத் தூங்கியவர்களுக்கு இந்தக் காட்டிலும் பிரியாணி கிடைத்தது என்றால், அதற்குக் காரணம் எஸ்.ஐ. ராஜ்குமார் சார்தான். அவர்தான், 'அக்யூஸ்ட்டைப் பிடிக்கும் வரை அனைவருக்கும் அரைவயிறு சாப்பாடுதான், அப்போதுதான் யாரும் தூங்க மாட்டீர்கள். ஆளை ட்ரேஸ் செய்ததும்  ஃபுல் பிளேட் பிரியாணி வந்து விடும், அதற்கு நான் கியாரன்டி. சாப்பிட்ட பின் நீங்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம். நானும் எஸ்.ஐ.பால்ராஜும் மற்றவற்றைப் பார்த்துக் கொள்கிறோம்' என்றவர்...  சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற எத்தனை கிலோ மீட்டர் காட்டை விட்டு வெளியே பயணம் போனாரோ தெரியாது. சொன்னபடி அனைவருக்கும் பிரியாணியைக் கொண்டு வந்து சேர்த்து விட்டார். அந்தத் தெம்பில்தான் முண்டேல்பாஜூவை எங்கள் டீம் புரட்டி யெடுத்து விட்டது. இப்போது மாரேடிபூடி நாகபூஷணம், தோட்டா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் பிடித்தால்தான் கொள்ளையடிக்கப்பட்ட  நகைகளை மீட்டுக் கொண்டு சென்னைக்குத் திரும்பமுடியும்.




இன்ஸ்பெக்டர் என்ன நினைக்கிறாரோ என்று வழக்கம் போல நவீன் சார் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவர், பேஜரில் மெசேஜ் அனுப்புவது, வந்த மெசேஜைப் பார்ப்பது என்றிருந்தார். கமிஷனர், ஜே.சி, டி.சி, ஏ.சி. என்று அதிகாரிகளுக்கு டீமின் மூவ்மென்ட்டை பேஜர் மூலம் இப்படித்தான் சொல்லிக்கொண்டே இருப்பார். அதிகாரிகளும் அவர்கள் 'சோர்ஸ்' (தகவல் கொடுப்பவர்கள்) மூலம் எங்கள் வேலையில் இருக்கும் சிக்கலை பேஜரில் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அன்றும் அப்படித்தான் பேஜரை 'ரீட்' செய்து கொண்டே இன்ஸ்பெக்டர் திடீரென்று மகிழ்ச்சியானார். அவர் முகம் பிரகாசமானது. 


              

'ஓ.கே.பாய்ஸ், அக்யூஸ்ட்கள் யாரும், அந்த 'மில்'லில் இல்லை. முண்டேல்பாஜூ சொன்னது உண்மைதான். நாம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவோம். அந்த இடம் எந்த  'மில்' லும் அல்ல. பாரஸ்ட் ஆபீஸர்ஸ் ஒருகாலத்தில் தங்குவதற்குக் கட்டப்பட்ட இடம். இப்போது பாழடைந்து விட்டதால், காட்டில் விறகு சேகரிப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 'மில்' லில் அவர்களின் நடமாட்டம்தான் இருக்கிறது. மெயின்ரோட்டில் நிற்கும் நம்முடைய வண்டிகளை உள்ளே கொண்டு வாங்க, உடனே போங்க. நாம் ரயில்வே ஸ்டேசனுக்கு உடனே போகவேண்டும்.' என்று இன்ஸ்பெக்டர் அவசரப் படுத்தினார். போலீஸ் வண்டிகள் காட்டுக்குள் வேகம் பிடித்து வந்த சத்தத்தைக் கேட்டதும், விறகு பொறுக்க வந்தவர்கள், 'சாமீ, எங்களை விட்ருங்க... வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் இப்படி காட்டில் வந்து கட்டைகளை பொறுக்குகிறோம்' என்று மொத்தமாய் காலில் விழுந்தனர். எங்களுடன் இருந்த ஆந்திர போலீஸார், லத்தியை உயர்த்தி அவர்களை அங்கிருந்து போகும்படி எச்சரித்தனர். அப்போது எங்கள் டீமில் இருந்த போலீஸார், மிச்சமிருந்த பிஸ்கெட், பிரியாணி, பழங்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆந்திர போலீஸார் எங்களை ஆச்சர்யமாகப் பார்த்தனர். 'பெரிய அக்யூஸ்ட்டாக இருந்தால் எங்கள் உதையும் அதிகமாக இருக்கும், உணவும் அதிகமாகக் கொடுப்போம். இது போன்ற  ஏழை-பாழைகளை அடிக்க மாட்டோம், எச்சரித்து அனுப்பி விடுவோம். இருந்தால் சோறும் போட்டு அனுப்புவோம்' என்று நாங்கள் சொல்ல, அவர்களுக்கு இன்னும் ஆச்சர்யம். அதற்குள் ஆந்திர போலீஸ் ஜீப் வந்துவிட பேசிக்கொண்டே அனைவரும் அதில் ஏறிக்கொண்டோம். முண்டேல் பாஜூவை ஜீப்பின் பின்பக்கத்தில் மையமாக சாய்த்து உட்காரவைத்து விட்டு அவனுக்கு முன்னும், பின்னுமாக எஸ்.ஐ.கள் பால்ராஜ், ராஜ்குமார், இரண்டு ஏட்டுகள் உட்கார்ந்து கொண்டனர். கார்னரில் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கொண்டார். ஜீப் கிளம்பியதும், இன்ஸ்பெக்டர் நவீன் சார் முண்டேல்பாஜூவிடம் பேச ஆரம்பித்து விட்டார்.


 'கொஞ்சம் பிரியாணி, பிஸ்கெட் கொடுத்ததும் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள், அவர்களைப் போய் மூலிகை வைத்தியர்கள் என்று சொல்லிட்டீயேடா... அந்தத் தோட்டா கிருஷ்ணமூர்த்தி பற்றி நீ சொன்னது அத்தனையும் உண்மைதானா, பொய் சொல்லி விட்டாயா.. அவன் எப்படியிருப்பான்? உன்னை மாதிரியே வெயிட்டா இருப்பானா,  எப்போதும் 'கன்' கையில் இருக்குமா அல்லது அதை, மூட்டை கட்டி வைத்திருப்பானா?' என்றெல்லாம் முண்டேல்பாஜூவிடம் கேட்டுக் கொண்டு வந்தார். பேசிக் கொண்டே அடுத்த முக்கால் மணிநேரத்தில் ரயில்வே ஸ்டேசனை நெருங்கி விட்டோம். ஸ்டேசன் அருகே ஜீப்பை நிறுத்தாமல், தூரத்திலேயே நிறுத்தினோம். நூறு மீட்டருக்கு இரண்டுபேர் என்ற கணக்கில் இடைவெளி விட்டு இறங்கிக்கொண்டோம். எதிரெதிர் சாலையில் நடந்து ரயில்வே ஸ்டேசனுக்குள் நுழைந்தோம். ஆந்திரா ஸ்பெஷல் டீம் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு ஏற்கெனவே எங்கள் டீமின் உயரதிகாரிகள் தகவலைக் கொடுத்திருந்ததால் அங்கே 'மப்டி' யில் போலீஸ் குவிந்திருந்தது. எங்களிடம் இருந்தது போலவே ஆந்திர போலீஸார் கையிலும் தோட்டா கிருஷ்ணமூர்த்தியின் புகைப்படம் இருந்தது. முண்டேல் பாஜூவுடன்  நான்கு போலீஸாரை ஜீப்பிலேயே உட்காரச் சொல்லி விட்டு மற்றவர்கள்  ஸ்பாட்டை நெருங்கினோம். 'டவுன் போலீஸ் ஸ்டேசன், பிளாக் 1 ஆம் நம்பர் 'கேட்' டுக்குப் பக்கத்தில்தான் தோட்டா கிருஷ்ண மூர்த்தி இருப்பான்' என்று முண்டேல்பாஜூ வாக்குமூலத்தில் சொன்னது குறித்து ஆந்திர போலீஸாரிடம் நவீன் சார் சொன்னார். 'அவன் பதற்றத்தில் ஏதோ சொல்லியிருக்கிறான் சார். பிளாக் 1 என்றது மட்டும்தான் சரி. அது ரயில்வே பாய்ன்ட். நம்ம ஆட்கள் அந்தப் பகுதியை ரவுண்ட் பண்ணிட்டாங்க. இன்னும் பத்து நிமிடத்தில் ஆளைத் தூக்கிடலாம். ஆள் யார் என்பதை உங்களைப் போல இன்வெஸ்டிகேட் செய்வதுதான் கஷ்டம். அதற்குப்பின் மற்ற வேலைகள் சுலபமாக முடிந்து விடும்' என்றனர். பேசிக் கொண்டே தோட்டா கிருஷ்ணமூர்த்தி இருந்த ஸ்பாட்டை நெருங்கி விட்டோம். அது தமிழ் நாட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்த ரயில். கூட்டம் அதிகம் இல்லை. ரயிலின் இரண்டு பக்கமும் போலீஸார் தயாராக இருந்தனர். ரயிலில் ஏறப்போகும் பயணியாகவும் இல்லாமல், வழியனுப்ப வந்தவனாகவும் இல்லாமல் சிமென்ட் ரீப்பர் மீது தோட்டா கிருஷ்ணமூர்த்தி உட்கார்ந்திருந்தான். கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு மூட்டை இருந்தது. பத்தடி தூரத்தில் 'கன்' பாய்ன்ட்டில் வளைக்கப் பட்டிருப்பது தெரியாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவன் எதிரில் போய் நின்றோம். போலீஸ் ஹேர்கட் இல்லை, மூன்று நாள்களாக ஷேவ் செய்யவில்லை. லுங்கி, அழுக்குச் சட்டை வேறு. எங்களை நிமிர்ந்து பார்த்து, 'என்ன வேண்டும்' என்றான், தோட்டா கிருஷ்ணமூர்த்தி.இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");