[ad_1]





காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா என்ற இடத்தில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம்மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் 4 போலீஸ்காரர்கள் பலியானார்கள். முகாமுக்குள் புகுந்த மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 36 மணி நேரம் இந்தச் சண்டை நடந்தது.




சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர், 22 வயது மன்சூர் பாபா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இன்னொருவர் 10-ம் வகுப்பு மாணவன். அந்த மாணவனின் பெயர் அகமது காண்டே.  3 மாதங்களுக்கு முன்பு வரை பள்ளியில் படித்துவந்த காண்டே, திடீரென்று வீட்டிலிருந்து காணாமல்போனவன்,  ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்துள்ளான். அமைப்பில் சேர்ந்த மூன்று மாதங்களிலேயே போலீஸ் முகாம்மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளான்.

இந்த மாணவனின் தந்தை போலீஸ்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநகரில், காஷ்மீர் போலீஸ் துறையில் அவர் பணி புரிகிறார். ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் சொந்த ஊரான திரால் என்ற கிராமம்தான் இந்த மாணவனுக்கும் சொந்த ஊர்.

ஹஃபீஸ் சயீத் அமைப்புக்கு நிதி திரட்டத் தடை

பாகிஸ்தானுக்கான பொருளாதார நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியதாக அறிவித்த சில மணி நேரங்களில், லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஹஃபீஸ் சயீத்தின் அமைப்பு நிதி திரட்டுவதற்கு, பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. 

தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாகக் கூறியுள்ளது.  இதனால் ஆடிப்போன பாகிஸ்தான், உடனடியாக ஹஃபீஸ் சயீத்தின் ஜமா வுத் தாவா அமைப்புக்கு நிதி திரட்ட தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்ல, ஐ.நா சபையின் பட்டியலிடப்பட்ட அமைப்புகளும் பாகிஸ்தானில் நிதி திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தொழில்நிறுவனங்களோ, தனி நபர்களோ இந்த அமைப்புக்கு நிதி வழங்கக் கூடாது. ஜமா வுத் தாவா அமைப்பில் இருந்துதான் லஸ்கர் இ தொய்பா அமைப்புக்கு நிதி செல்கிறது. 


பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடியை அமெரிக்கா நிதியாக வழங்கியிருக்கிறது. தற்போது வழங்கவிருந்த ரூ. 1,700 கோடியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிதியை நிரந்தரமாக நிறுத்தவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை செய்துவருகிறார்.  முட்டாள்தனமாக பாகிஸ்தானை அமெரிக்கா நம்பி நிதியுதவி அளித்துவந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");