[ad_1]







இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி-40, 1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதில் 3 இந்திய செயற்கைக்கோள்களும், 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் உள்ளன.




இஸ்ரோவின் வடிவமைப்பான, கார்டோசாட் - 2  செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில், மூன்று இந்திய செயற்கோள்களும், அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28ம் உள்ளன. கார்டோசாட் - 2, செயற்கைக்கோளின்  எடை 710 கிலோ. 
ராக்கெட் ஏவப்பட்ட  2.21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்டப் பாதையில் கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள்.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே,  பூமியின் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படமெடுத்து அனுப்பும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");