[ad_1]
பகுதி 1 I பகுதி 2 I பகுதி 3 I பகுதி 4 I பகுதி 5
ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டினின் ரசிகர்களைப் பார்த்து, `ஸ்டோன் கோல்டு நல்லவரா, கெட்டவரா' எனக் கேட்டால், `நாயகன்' படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல திருதிருவென முழிப்பார்கள். அதே கேள்வியை ஸ்டோன் கோல்டிடம் கேட்டால் `மாரி' படத்தில் வரும் தனுஷைப் போல `இதுல என்ன சந்தேகம் நான் கெட்டவன்தான்' எனப் பெருமையாக மார்தட்டுவார். தன்னை ஒருபோதும் நல்லவனாக காட்டிக்கொள்ள அவர் விரும்பவேயில்லை. அவர் அப்படித்தான்.
"ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்... என்ன கருமம் அது. நீதி, நேர்மை, நியாயம் பற்றியெல்லாம் எனக்குப் பாடம் எடுக்காதே. ஸ்டீவ் ஆஸ்டினுக்குக் கருணையே கிடையாது. உனக்குக் கருணை வேணுமா? கடவுள் கிட்டே போ"
- ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஆஸ்டின் எனும் ஊரில் ஸ்டீவ் ஜேம்ஸ் ஆண்டர்சனாகப் பிறந்தார் ஸ்டீவ் ஆஸ்டின். அவர் சிறுவனாக இருந்தபோதே அவரது பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று, பிரிந்தார்கள். அவரது அம்மா பெவர்லி, கென் வில்லியம்ஸ் என்பவரை மறுமணம் செய்துகொள்ள, தன் பெயரை ஸ்டீவ் ஜேம்ஸ் வில்லியம்ஸ் என மாற்றிக்கொண்டார் ஸ்டோன் கோல்டு. மொத்தம் அவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். ஸ்டோன் கோல்டின் தம்பிதான் கோல்டுபெர்க் என்பதெல்லாம் ஆறடி விட்டம் கொண்ட வட்ட வடை! பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டில் பிரித்து மேய்வார் ஸ்டீவ். அதில் கிடைத்த ஸ்காலர்ஷிப்பின் மூலம், கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
`நீங்க ரெஸ்ட்லர் ஆகாமல் இருந்திருந்தால், வேறு என்னவாக ஆகியிருப்பீர்கள்' என ஸ்டோன் கோல்டைப் பார்த்துக் கேட்டால், சில்லென பீர் வாங்கி கொடுத்து சியர்ஸ் அடிப்பார். சியர்ஸ் அடித்துவிட்டு ஒரு மடக்கு குடிப்பதற்குள், வயிற்றிலேயே மிதித்து ஸ்டன்னரை போட்டிருப்பார். அவர் ரெஸ்ட்லிங்கைத் தவிர வேறு எதையும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கல்லூரியை முடித்துவிட்டு முதல் வேலையாக ப்ரொ ரெஸ்ட்லிங் வகுப்பில் சேர்ந்தார். வெகு சீக்கிரத்திலேயே பயிற்சியை முடித்துவிட்டு CWA ( கான்டினென்ட்டல் ரெஸ்ட்லிங் அசோஷியேசன்)-ல் சில காலங்கள் சண்டையிட்டு வந்தார். அங்கு ஏற்கெனவே ஸ்டீவ் வில்லியம்ஸ் என்ற பெயரில் ஒருவர் இருந்ததால், ஸ்டீவுக்கு அவர் ஊர் பெயரைப் பின்னால் சேர்த்து ஸ்டீவ் ஆஸ்டின் எனப் பெயர் சூட்டினர். அதன்பின், USWA, WCW மற்றும் ECW-யிலும் சண்டையிட்டார். ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன்...
கெவின் நாஷும் ஜிம் ரோஸும் WWE-யின் முதலாளி மெக்மெஹானின் மனதைக் கழுவி, ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டினை WWE-க்குள் இழுக்க வைத்தார்கள். 1996-ஆம் ஆண்டு WWE அரங்கிற்குள் காலடி எடுத்துவைத்த அவருக்கு, `மில்லியன் டாலர் சாம்பியன்ஷிப்' பெல்ட்டைக் கொடுத்து வரவேற்றார் டெட் டிபயாஸீ. தனது முதல் மேட்சில் மாட் ஹார்டியை எதிர்த்து சண்டையிட்டு தோற்கடித்தார். WWE-யில் என்ட்ரியாகும்போது ரிங்மாஸ்டர் என்று தன் பெயரை மாற்றிவைத்திருந்தார் ஸ்டீவ். ஆனால், நிகழ்ச்சி தொகுப்பாளர்களோ `ரிங் மாஸ்டர்' என்ற பெயரை மறந்துவிட்டார்கள். நாள்கள் உருண்டோட `ரிங் மாஸ்டர்' என்ற பெயர் ஸ்டீவுக்குப் பெரும் அலுப்பை கொடுத்தது. `இத எப்படிப் படிச்சாலும் ஃபோர்ஸா இல்லையே... படிக்கும்போதே ஃபோர்ஸா இருக்குற மாதிரியான பெயரை யோசிக்கணும்' என நீண்டநாள் யோசித்து ஸ்டோன் கோல்டு என்ற அடைமொழியைப் பிடித்தார். ரிச்சர்டு கக்லின்ஸ்கி எனும் சீரியல் கொலைகாரனின் பட்டப்பெயர் `தி ஐஸ்மேன்'. அதிலிருந்து இன்ஸ்பையர் ஆனதுதான் இந்த ஸ்டோன் கோல்ட்! பெயரையும் மாற்றி, கெட்டப்பையும், செட்டப்பையும் மாற்றி தாறுமாறாய் வந்திறங்கினார். மொட்டைத் தலையும் ஆட்டுத்தாடியுமாக செமத்தியான லுக்கோடு ஸ்டீவ்வின் திமிரும் சேர, ரசிகர்கள் கொண்டாடினர். 1996 ஆம் ஆண்டு `கிங் ஆஃப் தி ரிங்' பட்டத்தை ஜெயித்த கையோடு, மூச்சிரைக்க ஸ்டோன் கோல்டு கொடுத்த பேட்டி, மிகப்பிரபலமான ஒன்று. அதில் பிறந்த வார்த்தைதான் ஆஸ்டின் 3:16. அந்த வார்த்தை பதித்த டி-ஷர்ட்டுகள் மலையளவு விற்றுத் தீர்ந்தன. WWE நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் லாபகரமான வீரர் ஸ்டோன் கோல்ட்தான்.
"ஆஸ்டின் 3:16 என்ன சொல்லுதுனா நான் உன்னை நார்நாறாய் கிழிச்சுருவேன்!"
- ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின்
ஆரம்பகாலத்தில், அப்போதைய சூப்பர் ஸ்டாரான ப்ரெட் ஹார்டிடம் `சண்டைக்கு வாடா, தடியா' என ஒரண்டை இழுத்துக் கொண்டேயிருப்பார் ஸ்டோன் கோல்ட். நீண்ட நாட்கள் அமைதிக்காத்து வந்த ப்ரெட் ஹார்ட், ஒரு கட்டத்தில் கடுப்பாகி `வாடா, மோதிப்பார்த்துடலாம்' என வெறியானார். ப்ரெட் ஹார்ட்டுக்கும் ஸ்டோன் கோல்டுக்கும் இடையே நடந்த போட்டிகள் ஒவ்வொன்றும் தெய்வீக லெவல். பக்காவான ஹீரோ - வில்லன் காம்பினேஷன் அமைந்த தாறுமாறான ஒரு ஆக்ஷன் படத்தைப் பார்ப்பது போன்ற ஃபீலைத் தரும். 13வது ரெஸ்ட்ல்மேனியாவில், ப்ரெட் ஹார்ட்டுக்கும் ஸ்டோன் கோல்டுக்கும் இடையே `சப்மிஷன் மேட்ச்' நடந்தது. அதில் ப்ரெட் ஹார்ட் வெற்றிப்பெற்றுவிட்டார். ஆனால், வெற்றிப்பெற்றும் லாக்கை விடுவிக்காமலேயே இருக்க, மக்கள் ப்ரெட் ஹார்டின் மீது கோபமானார்கள். அந்தக் கணம், ப்ரெட் ஹார்ட் வில்லன் ஆனார். ஸ்டோன் கோல்ட் ஹீரோ ஆனார். முழுமையான ஹீரோவாக அல்ல, ஆன்டி ஹீரோவாக. அதன் பிறகு, ஷான் மைக்கேல்ஸ், அண்டர்டேக்கர், தி ராக் என எத்தனையோ பேரிடம் சண்டைப் பிடித்திருக்கிறார். அத்தனை சண்டைகளுமே அற்புதமானவை. ஸ்டோன் கோல்டும் தி ராக்கும்தான் WWE-ன் தல-தளபதி. ஸ்டோன் கோல்டின் கடைசி சண்டையும் தி ராக்கோடுதான் நடந்தது. அதன் பிறகு, அவ்வப்போது விருந்தினராக வந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்.
பீர், மண்டை ஓடு, மிடில் ஃபிங்கர் என முழுக்க முழுக்க அடல்ட்களுக்கான சூப்பர்ஸ்டாராக மாறினார். WWE-ன் உரிமையாளர் மெக்மேஹானையே தூக்கிப்போட்டு வெளுப்பது, கெட்டகெட்ட வார்த்தையில் கழுவி ஊற்றுவது, ஒரே ஒரு ஸ்டன்னரைப் போட்டுவிட்டு பிரச்னையை க்ளோஸ் செய்வதென ஸ்டோன் கோல்டின் ஒவ்வோர் அசைவுக்கும் புதிதாய் ஒருவன் அவரது ரசிகனாகிக்கொண்டிருந்தான். ஸ்டோன் கோல்டும் ட்ரிபிள் ஹெச்சும் சேர்ந்து `பவர் ட்ரிப்' என்ற புது அணியை ஆரம்பித்தார்கள். அப்படியொரு இரக்கமற்றவர்களின் கூட்டணியை WWE அதற்கு முன் பார்த்ததேயில்லை. மெக்மேஹான் ஒருமுறை ஸ்டோன் கோல்டுக்கு பயந்து பேன்ட்டிலேயே உச்சா அடித்த சம்பவமெல்லாம் இருக்கிறது.
எங்கு கண்ணாடி க்ளாஸ் உடையும் சத்தம் கேட்டாலும் சரி, WWE- ரசிகர்களுக்கு ஸ்டோன் கோல்டுதான் நினைவுக்கு வருவார். அரங்கத்தில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட அடுத்தகணம், ரசிகர்களின் கைத்தட்டலும் விசிலும் கூரையை அசைத்துப் பார்க்கும். சமீபத்தில் அவர் அரங்கிற்குள் என்ட்ரியாகும்போதும் அதேதான் நடந்தது. இனியும் அதேதான் நடக்கும். ஏனெனில், ரெஸ்ட்லிங் ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்டோன் கோல்டு எந்த யுகத்திலும் கிடைக்கமாட்டார். "And that's the bottom line, because Stone Cold said so."
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
எல்லோரும் வில்லன்...ஸ்டோன் கோல்டு வில்லாதி வில்லன்! - #WWE கிங்ஸ் ஆஃப் த ரிங்ஸ் பகுதி 5
TAGS :
COMMENTS