[ad_1]







அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ``ஒருநாள் பொறுத்திருங்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.


கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். அப்போது, ``குடும்பம்தான் முக்கியம். முதலில் உங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். என் காலில் விழ வேண்டாம். கட்டுப்பாடுதான் மிக முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன்" என்று தடாலடியாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

அன்று முதல் இன்று வரை தனது போயஸ் கார்டனில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்குச் செல்லும் முன்பு செய்தியாளர்கள் தினந்தோறும் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளை எழுப்பிக்கொண்டே வருகின்றனர். அதற்கு, சிரிப்பே தனது பதிலாக அளித்துவிட்டுச் செல்வார். 


டிசம்பர் 31-ம் தேதி நாளை வர உள்ள நிலையில், இன்று தன் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, "சென்னை எனக்கு எப்போதுமே மெட்ராஸ்தான். சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தம்மை உயர்த்தியவர்கள் பாலசந்தர், சுரேஷ் கிருஷ்ணா. என்னை நடிகராக்குவதற்கு என் அண்ணன் மிகவும் கஷ்டப்பட்டார். இதற்காக என்னுடைய அண்ணன் வேலைக்குச் சென்றார். தமிழ் கற்றுக்கொண்டதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்" என்று பேசினார். பின்னர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்குப் புறப்படுவதற்கு காரில் ஏறுவதற்காக வந்தார். அப்போது செய்தியாளர்கள், அரசியல் பிரவேசம் எப்போது என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த ரஜினி, ``ஒருநாள் பொறுத்திருங்கள்'' என்றார்.
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");