[ad_1]
Chennai: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.முக, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அதற்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. மனு மீதான பரிசீலனைக்காக இன்று காலையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வந்துவிட்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொகுதியில் தங்கிய விஷால், அங்கிருந்தபடியே நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
மனு பரிசீலனையின்போது சுயேச்சைகளின் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 32 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 39 பேரின் மனுக்கள் இதுவரையில் ஏற்கப்பட்டுள்ளன. 72 வது மனுவாகப் பரிசீலிக்கப்பட்ட விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். முன்னதாக, வங்கிக் கணக்கை விஷால் சரிவர தாக்கல் செய்யவில்லை என்று கூறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் விஷாலின் மனுவை நிராகரிக்க வலியுறுத்தினர். இந்நிலையில், விஷால் மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை செய்யும் இடத்தில் காத்திருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
விஷாலின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு..! | Vishal Nomination For RK Nagar Hold By EC
TAGS :
COMMENTS